யாருக்கு எத்தனை பேர் ஆதரவு ? | Dinamalar

யாருக்கு எத்தனை பேர் ஆதரவு ?

Updated : நவ 25, 2019 | Added : நவ 24, 2019 | கருத்துகள் (24)
Share
புதுடில்லி: மஹாராஷ்டிர மாநில ஆட்சி அமைத்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில்; ஆளும் பா.ஜ., தரப்பில் தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், சிவசேனா கூட்டணி தரப்பில் 165 பேர் ஆதரவு இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விவாதங்களுக்கு பின்னர் நாளை ( 26 ம் தேதி ) காலை 10.30 க்கு உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள்

புதுடில்லி: மஹாராஷ்டிர மாநில ஆட்சி அமைத்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில்; ஆளும் பா.ஜ., தரப்பில் தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், சிவசேனா கூட்டணி தரப்பில் 165 பேர் ஆதரவு இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விவாதங்களுக்கு பின்னர் நாளை ( 26 ம் தேதி ) காலை 10.30 க்கு உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில் பட்னவிஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல்ரோத்தகி;
மஹாராஷ்ட்டிராவில் நடப்பது வேறு, கர்நாடகாவில் நடந்தது வேறு, ஆதரவு கடிதத்தில் போலியான கையெழுத்துகள் ஏதும் இடப்படவில்லை. ஆதரவு கடிதம் போலி என்று கூற முடியாது.
நீதிபதிகள் குறுக்கிட்டு இதுபோன்ற நேரங்களில் 24 மணி நேரத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தலாமே என்றனர்.
இதற்கு பதில் அளித்த முகுல்ரோத்தகி; நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு அவகாசம் தேவை. இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும். மேலும் சட்ட ரீதியிலான நடைமுறைகள் உள்ளன. கவர்னர் 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இதனால் உடனடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது இயலாது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, மற்றும் கவர்னர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்தில் ; " அஜித்பவாரோ தேசியவாத காங்கிரசின் சட்ட மன்ற குழு தலைவர் . அவருக்கு ஆதரவு அளிக்க முழு அதிகாரம் உண்டு. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் என்ற முறையில் அஜித்பவார் 54 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு கடிதம் அளித்துள்ளனர்.
இது போக சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் , ஆவணங்கள் அடிப்படையில்தான் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எந்தெந்த தேதிகளில் என்ன நடந்தது என்பதை விவரமாக விளக்கி உள்ளோம். கவர்னரின் அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது. இவ்வாறு அவர் வாதிட்டனர்.
ஆளும் பா.ஜ., தரப்பில் தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், சிவசேனா கூட்டணி தரப்பில் 156 பேர் ஆதரவு இருப்பதாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

latest tamil newsமஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 288 இடங்களில், பா.ஜ., - சிவசேனா கூட்டணிக்கு, 161 இடங்கள் கிடைத்தன. எனினும், முதல்வர் பதவிக்கான போட்டியால், பா.ஜ., - சிவசேனா கூட்டணி உடைந்தது. யாரும் ஆட்சி அமைக்காத நிலையில், மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பேச்சு நடத்தின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பதவியேற்பார் என, 22ம் தேதி இரவு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார்.ஆனால், மறுநாள் அதிகாலை, திடீர் திருப்பமாக, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டது.


பதவியேற்றனர்பா.ஜ., ஆட்சி அமைக்க, தேசியவாத காங்கிரசின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார், ஆதரவுதெரிவித்தார். இதையடுத்து, முதல்வராக, பா.ஜ.,வின் தேவேந்திரபட்னவிஸ், துணைமுதல்வராக, அஜித் பவார் பதவி யேற்றனர்.இது, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


latest tamil newsஇதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், இக்கட்சிகள் உடனடியாக முறையிட்டன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு விபரம்:மஹாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் மற்றும் துணை முதல்வராக அஜித் பவாருக்கு, கவர்னர் கோஷியாரி, சட்ட விரோத மாக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இது செல்லாது என,அறிவிக்க வேண்டும். மேலும், குதிரை பேரத்தில், பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. அதனால், 24 மணி நேரத்துக்குள், பெரும்பான்மையை நிரூபிக்க, பட்னவிசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விடுமுறை நாளான நேற்று (24 ம் தேதி ) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, நீதிமன்றத்தை தொந்தரவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக வருந்துவதாகவும் கூறினர். அதற்கு நீதிபதிகள், 'இது போன்ற சூழலில் பணியாற்றுவது எங்கள் கடமை; வாதத்தைத் தொடரலாம்' என்றனர்.

முறிந்தது தன் வாதத்தில், கபில் சிபல் கூறியதாவது:தேர்தலுக்கு முன் அமைந்த, பா.ஜ., - -சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது. அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை.ஆதலால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை, சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால், மஹாராஷ்டிராவில் அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி, எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டாமல், வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது, மிகவும் வினோதமான செயல்.அதுமட்டுமல்லாமல், முதல்வராக தேவேந்திரபட்னவிஸ் மற்றும் துணை முதல்வராக அஜித் பவாரும், எந்த அடிப்படையில் பதவி ஏற்றனர் என்பதை விளக்க வேண்டும். எந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து, இவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவர்னரின் செயல்கள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது; ஒரு தலைப்பட்சமானது.இவ்வாறு, கபில்சிபல் கூறினார்.

மூத்த வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில், 54 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இப்போது, கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு, 41 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறது. அதுமட்டுமின்றி, தேசியவாத காங்கிரசின் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து, அஜித் பவாரை நீக்கி, அதற்கான கடிதமும், கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.
குதிரை பேரம்

அப்போது, கபில் சிபல் குறுக்கிட்டு, ''சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர், 30ம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளார். இவ்வளவு கால அவகாசம் அளிப்பது, குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். ஆதலால், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க, உத்தரவிட வேண்டும்," என்றார். மஹாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முகுல் ரோத்தகி, ''நீதிமன்றத்தின் விடுமுறை நாளில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய, அவசரமும், அவசியமும் இல்லை. விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்," என்றார்.

அப்போது, அபிஷேக் சிங்வி குறுக்கிட்டு கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில், 2018 ல் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்ட போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், பெரும்பான்மையை நிரூபிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'ரகசிய ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது; வெளிப்படையாக நடத்த வேண்டும்' என, உத்தரவில் கூறப்பட்டது. அதேபோல, தற்போதும், மஹாராஷ்டிர சட்டசபையை உடனடியாக கூட்டி, வெளிப்படையான ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முகல் ரோத்தகி கூறுகையில், ''கவர்னர், எந்தவிதமான சட்டவிதிகளையும் மீறவில்லை. அதனால், எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க, எந்த தேதியையும், நீதிமன்றம் அறிவிக்கத் தேவையில்லை," என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மஹாராஷ்டிர அரசு, மத்திய அரசு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தர விட்டனர்.

உத்தரவில் நீதிபதிகள் கூறியிருந்ததாவது:முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர், கவர்னரிடம் அளித்த எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதங்கள், அது தொடர்பான ஆவணங்கள்; ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யக் கோரி, கவர்னர் பரிந்துரைத்த கடிதம்; ஆட்சிஅமைக்க, பட்னவிசுக்கு கவர்னர் அழைப்பு விடுத்த கடிதம் ஆகியவற்றை, இன்று காலை, 10:30 மணிக்குள், தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் இந்த வழக்கில், தேவையான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, 'கடிதங்கள் தாக்கல் செய்ய இரண்டு நாள் அவகாசம் வேண்டும்' என, கேட்டார். இதை ஏற்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர்.


காங்., கோரிக்கை


உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலை வருமான பிரிதிவிராஜ் சவான் கூறியதாவது:தேசியவாத காங்கிரஸ் கட்சியின், 54 எம்.எல்.ஏ.,க்களில், 41 பேரின் ஆதரவு, சரத் பவாருக்கு உள்ளது. அப்படியிருக்கையில், அஜித் பவார் கொடுத்த ஆவணங்களை வைத்து, பட்னவிசுக்கு முதல்வராக, கவர்னர் பதவி பிரமானம் செய்து வைத்தது தவறு.

சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணிக்கு, பெரும்பான்மை பலம் உள்ளது. பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருந்தால், அதை உடனவடியாக சட்டசபையில் நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். 165 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுசிவசேனா திட்டவட்டம் ''சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணிக்கு, 165 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது' என, சிவசேனா மூத்த தலைவர், சஞ்சய் ராவத் கூறினார்.

அவர் கூறியதாவது:அஜித் பவார் காட்டிய போலி ஆவணங்களை வைத்து, பட்னவிஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைய, கவர்னர் கோஷியாரி அனுமதித்துள்ளார் பெரும்பான்மையை நிரூபிக்க, 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, குதிரை பேரத்தில், பா.ஜ., ஈடுபட உதவும் வகையில் தான், அதிக நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணிக்கு, 165 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. கவர்னர் கேட்டால், அவர் முன், எம்.எல்.ஏ.,க்களை ஆஜர்படுத்தவும் தயாராக உள்ளோம். எங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, 10 நிமிடம் போதும்.சரத் பவாருக்கு துரோகம் செய்துள்ளதன் மூலம், வாழ்நாளில் மாபெரும் தவறை, அஜித் பவார் செய்துள்ளார். அஜித் பவாரை வைத்து, தேசியவாத காங்கிரசை, பா.ஜ., உடைத்துள்ளது.
இந்நடவடிக்கை, பா.ஜ.,வுக்கு எதிராக திரும்பும். அஜித் பவார், 30 - 40 எம்.எல்.ஏ.,க்களை தன்னுடன் அழைத்து வருவார் என, பா.ஜ., நம்பியுள்ளது. ஆனால், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, அஜித் பவாருடன் உள்ளனர். மஹராஷ்டிரா வரலாற்றில், நவ., 23ம் தேதி கருப்பு தினமாக அமைந்துவிட்டது. நாட்டில், இந்திரா, நெருக்கடி நிலையை அமல்படுத்திய நாளை, கறுப்பு நாள் என கூற, பா.ஜ.,வுக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு, சஞ்சய் ராவத் கூறினார்.


ஓட்டல்களில் எம்.எல்.ஏ.,க்கள் சிறைவைப்புமஹாராஷ்டிராவில், குதிரை பேரம் நடக்கலாம் என்பதால், சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கட்சிகள், தங்கள் எம்.எல்.ஏ.,க்களை, ஓட்டல்களில் தங்க வைத்துள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள, நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப் பட்டு உள்ளனர்.போவய் பகுதியில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒட்டலில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ளனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தனர். கடைசி நேரத்தில், இந்த திட்டம் ரத்தானது.எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள ஓட்டல்களை சுற்றி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்களுக்கு வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே, உள்ளே அனுப்பப்படுகின்றன.


பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ., உறுதி

'பட்னவிஸ் அரசுக்கு, 170 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. சட்டசபையில், முதல்வர் பெட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிப்பார்' என, பா.ஜ., கூறியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., மூத்த தலைவர், ஆஷிஷ் ஷீலர் கூறியதாவது:பட்னவிஸ் அரசுக்கு, 170 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. அவர் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, வலிமையான, நிலையான ஆட்சியை, பட்னவிஸ் வழங்குவார். பட்னவிஸ் முதல்வராக பதவியேற்ற பிறகே, மஹாராஷ்டிர மக்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருட்டில் பதவியேற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது.சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போல், நாங்கள் யாருக்கும் தெரியாமல், காங்., தலைவர் களை சந்திக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


சரத் பவார் தான் என் தலைவர்; அஜித் பவார்


துணை முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற, அஜித் பவார், நேற்று காலை, மும்பையில் உள்ள தன் வீட்டுக்கு திரும்பினார்.பின், கட்சி தலைவர்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்தார். தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவர், திலிப் வால்ஸ் பாட்டீல், அஜித் பவாரை சந்தித்து பேசினார்.
பின்னர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவுகளில் கூறியிருந்த தாவது:பிரதமர் மோடிக்கு எனது நன்றி. மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி ஏற்படுவதை, உறுதி செய்வோம். மக்கள் நலனுக்காக கடுமையாக உழைப்போம்.தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன். எப்போதும் இருப்பேன்.
சரத் பவார் தான், என் தலைவர். மஹாராஷ்டிராவில். பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை தரும்.மஹாராஷ்டிராவின் மேம்பாட்டுக்காகவும், மக்களின் நலனுக்காகவும், உண்மையுடன் உழைப்பேன். புதிய ஆட்சி அமைந்தில் எந்த குழுப்பமும் இல்லை; யாரும் கவலைப்பட வேண்டாம். எனினும் கொஞ்சம் பொறுமை தேவை. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.இவ்வாறு, அவர் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இதற்கு சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த அஜித் பவார் முயற்சிக்கிறார். அவரை யாரும் நம்ப வேண்டாம். எந்த காரணத்துக்காவும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமையாது,'' என, கூறியுள்ளார்.


அஜித் பவாருக்கு பதில் ஜெயந்த்கவர்னர் அலுவலகத்தில் கடிதம் தேசியவாத காங்கிரசின் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து, அஜித் பவார் நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். அவருக்கு பதில், அக்கட்சியின் சட்டசபை தலைவராக, ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபை தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட விபரத்தையும், புதிய தலைவர்குறித்து தெரிவிக்கும் கடிதத்துடன், கவர்னர் மாளிகைக்கு, நேற்று காலை, ஜெயந்த் பாட்டீல் சென்றார். ஆனால், மாளிகையில், கவர்னர் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகளிடம் கடிதத்தை ஒப்படைத்தார். 'தேசியவாத காங்., சட்டசபை தலைவர் பதவியிலிருந்து, அஜித் பவார் நீக்கப்பட்டது செல்லாது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.


சரத் பவார் - உத்தவ் தாக்கரே சந்திப்புமும்பையில், தேசியவாத காங்கிரஸ் எம்,எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நேற்று சந்தித்து பேசினர்உத்தவ் தாக்கரேவுடன், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் உடனிருந்தார்.


பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்மும்பையில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் பட்னவிஸ், மாநில பா.ஜ., தலைவர், சந்திரகாந்த் பாட்டீல், மத்திய அமைச்சர், ராவ்சாகேப் தன்வே ஆகியோர் பங்கேற்றனர். ஆட்சி குறித்தும், பெரும்பான்மையை நிரூபிப்பது பற்றியும், எம்.எல்.ஏ.,க்களுடன் பட்னவிஸ் ஆலோசனை நடத்தினார்.

பின், சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். பா.ஜ., - சிவசேனா கூட்டணியை உருவாக்கியது, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தான். அவர் இருந்திருந்தால், கூட்டணி உடைந்திருக்காது.கூட்டணியை உடைத்து, காங்கிரசுடன் கைகோர்த்துள்ளதன் மூலம், உத்தவ் தாக்கரே பெரும் பாவம் செய்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


165 பேர் ஆதரவு சிவசேனா திட்டவட்டம்சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:அஜித் பவார் காட்டிய போலி ஆவணங்களை வைத்து, பட்னவிஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைய, கவர்னர் கோஷியாரி அனுமதித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க, 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரத்தில், பா.ஜ., ஈடுபட உதவும் வகையில் தான், அதிக நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணிக்கு, 165 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. கவர்னர் கேட்டால், அவர் முன், எம்.எல்.ஏ.,க்களை ஆஜர்படுத்தவும் தயாராக உள்ளோம். எங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, 10 நிமிடம் போதும்.சரத் பவாருக்கு துரோகம் செய்துள்ளதன் மூலம், வாழ்நாளில் மாபெரும் தவறை, அஜித் பவார் செய்துள்ளார். அஜித் பவாரை வைத்து, தேசியவாத காங்கிரசை, பா.ஜ., உடைத்துள்ளது.

அஜித் பவார், 30 - 40 எம்.எல்.ஏ.,க்களை தன்னுடன் அழைத்து வருவார் என, பா.ஜ., நம்பியுள்ளது. ஆனால், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, அஜித் பவாருடன் உள்ளனர். மஹாராஷ்டிரா வரலாற்றில், நவ., 23ம் தேதி கறுப்பு தினமாக அமைந்துவிட்டது. நாட்டில், இந்திரா, நெருக்கடி நிலையை அமல்படுத்திய நாளை, கறுப்பு நாள் என கூற, பா.ஜ.,வுக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு, சஞ்சய் ராவத் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X