பாக்.,கில் மதமாற்றதடைச் சட்டம்: பார்லி., குழு அமைப்பு

Added : நவ 25, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற , நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து பெண் கடத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தைத்கண்டித்து ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Pakistan,பாகிஸ்தான்,பாக்., மதமாற்றதடைச் சட்டம், பார்லி., குழு, அமைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற , நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து பெண் கடத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தைத்கண்டித்து ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை இயற்ற இம்ரான் கான் தலைமையிலான அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற, சட்ட வரைவை உருவாக்குவதற்காக, 22 எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற குழுவை நாடாளுமன்ற செயலக தலைவர் சாதிக் சஞ்ரானி நியமித்துள்ளார்.


latest tamil news



மத விவகாரத் துறை அமைச்சர் நுாருல் ஹக் காத்ரி, மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் இல் முகமது கான் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார், மாலிக், மாலிக் முகமது, அமீர் தோகா, சுனிலா ரூத், ஜெய பிரகாஷ், லால் சந்த், முகமது அஸ்லாம் பூடானி, ராணா தன்வீர் ஹுசைன், தர்ஷன், கேசூ மால் கீயல் தாஸ், ஷாகுப்தா ஜுமானி, ரமேஷ் லால், நவீத் அமீர் ஜீவா, அப்துல் வாசே ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-201913:22:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மதமாற்றம் செய்வதற்கு யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்ன ? அப்படியே சட்டம் வந்தாலும் என்ன பயன் ? யாரும் மதிக்க போவதில்லை , இந்தியா போல் அங்கெ சிறுபான்மையினருக்கு கூச்சல் இடும் ஊடகங்களும் இல்லை.
Rate this:
Cancel
25-நவ-201911:36:14 IST Report Abuse
நக்கல் இந்தாளு வாயை திறந்தா பொய்யை தவிர வேறெதுவும் வராதா...திடீர்னு ஒரு நாள் இவன தூக்கிட்டாங்கன்னு செய்தி வரும், அதான் பக்கிகள்...
Rate this:
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
25-நவ-201909:27:08 IST Report Abuse
R.Subramanian ஒரு நாட்டில் நுழைந்து அந்த நாட்டின் இனம் மொழி கலாச்சாரம் அனைத்தையும் அழித்து எஞ்சி இருப்பவர்களை கத்தி முனையில் மதமாற்றம் செய்து விட்டு... அதன் பிறகு போப் கிறிஸ்துவம் செய்த அழிவிற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று ஒரு அறிக்கை விடுவார்... அது போல் இருக்கிறது பாகிஸ்தானின் செயல், தற்போது பாகிஸ்தானில் ஹிந்து வழிபாட்டு தளங்கள் 20 க்கும் கீழ் வந்து விட்டது (மற்ற கோவில்களை எல்லாம் இடித்து விட்டார்கள்) அதே போல் ஹிந்துக்களின் மக்கள் தொகையும் இல்லை என்ற நிலைக்கு வந்த பிறகு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருகிறார்களாம் எதற்கு இந்த சட்டம், சும்மா கண்துடைப்பு. இந்தியாவில் ஹிந்துக்களை கிறிஸ்துவர்களிடம் இருந்து காப்பாற்ற மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.
Rate this:
Rohin - jk ,இந்தியா
25-நவ-201911:15:33 IST Report Abuse
Rohinமத மாற்ற தடை சட்டத்தை நம் பாரத தேசத்தில் உடனே கொண்டு வரவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X