மஹா., ஆட்சி கலைப்பு; பிரதமருக்கு சிறப்பு அதிகாரம்

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement
புதுடில்லி: மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கலைப்பதற்கான பரிந்துரையை பிரதமரே அளிக்க, சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் அரசியல் அதிரடி நடந்து, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. நள்ளிரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம்(நவ.,23) அதிகாலையில், பட்னவிஸ் பதவியேற்றார். அதற்கு முன், மாநிலத்தில்
PM,Modi,BJP, மஹாராஷ்டிரா, ஆட்சி கலைப்பு, பிரதமர், சிறப்பு அதிகாரம்,ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கலைப்பதற்கான பரிந்துரையை பிரதமரே அளிக்க, சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் அரசியல் அதிரடி நடந்து, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. நள்ளிரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம்(நவ.,23) அதிகாலையில், பட்னவிஸ் பதவியேற்றார். அதற்கு முன், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ளும் உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்தார்.

வழக்கமாக, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மற்றும் அதை நீக்க, மத்திய அமைச்சரவையின் பரிந்துரை தேவை. ஆனால், மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல், எந்த அடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை நீக்குவதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.


latest tamil news



இதற்கு, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: அலுவல் ஒதுக்கீடு சட்டத்தின், 12வது விதியின்படி, அவசர காலங்களில் அமைச்சரவையை கூட்ட முடியாத நிலையில், முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே, ஜனாதிபதி ஆட்சியை நீக்க பிரதமர் பரிந்துரைத்தார். அதனடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-நவ-201920:14:49 IST Report Abuse
Sampath Kumar உங்களுக்கு ஓகே இல்லை என்றால் யாருக்கும் ஓகே இல்லை ஓகே ஓகே
Rate this:
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
28-நவ-201920:31:19 IST Report Abuse
rajprince சட்டம் மக்களின் நன்மைக அல்லது அரசியல்வாதியின் சுயநலர்த்திக்க
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
25-நவ-201918:49:41 IST Report Abuse
K. V. Ramani Rockfort இந்திய அரசியல் சட்டத்தை அறியாத காங்கிரஸ் ஏன் அரசியலிலிருந்தே விலக கூடாது ?அலுவல் ஒதுக்கீடு சட்டத்தின், 12வது விதியின்படி, அவசர காலங்களில் அமைச்சரவையை கூட்ட முடியாத நிலையில், முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X