விடுமுறையில் விசாரணை; இந்தாண்டில் 3வது முறை

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், விடுமுறை நாட்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவது, இந்தாண்டில் மூன்றாவது முறையாக நடந்துள்ளது.மஹாராஷ்டிராவில் அதிகாலை அதிரடியில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தி வந்த, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகள், இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்தன.
விடுமுறை, விசாரணை, உச்ச நீதிமன்றம், சுப்ரிம் கோர்ட், 3வது முறை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், விடுமுறை நாட்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவது, இந்தாண்டில் மூன்றாவது முறையாக நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் அதிகாலை அதிரடியில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தி வந்த, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகள், இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்தன. இதையடுத்து, நேற்று முன்தினமே(நவ.,23), மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. விடுமுறை நாளாக இருந்தபோதும், இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், இவ்வாறு பல முக்கிய வழக்குகள், விடுமுறை நாட்களிலும்; சில சமயம் நள்ளிரவிற்கு பிறகும் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டை பொறுத்தவரை, இது மூன்றாவது சம்பவம்.


latest tamil news



* உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் கொடுத்தார். அது தொடர்பான வழக்கின் விசாரணை, ஏப்., 20ல், விடுமுறை நாளான சனிக்கிழமை நடந்தது.

* பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பும், சமீபத்தில், நவ., 9ல், விடுமுறை நாளான சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
25-நவ-201909:06:24 IST Report Abuse
தத்வமசி பிஜேபிக்கு எதிராகவும் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளனர் என்று நன்கு அறிந்து கொள்ளலாம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-நவ-201909:00:55 IST Report Abuse
Natarajan Ramanathan பொணத்த எங்க பொதைக்கறது போன்ற அதிமுக்கியமான வழக்கையே நீதிபதிகள் நள்ளிரவில் விசாரிக்கும் அசிங்கம் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X