சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர்

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
லண்டன் : சிறையில் தண்டனை பெற்று வரும் விக்கிலீஸ் நிறுவனர் ஜூனியன் அசாஞ்சே, சிறையில் இறந்து விடுவாரோ என அச்சம் தெரிவித்து 60 டாக்டர்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே (48), பிற நாட்டு ராணுவ மற்றும் தூதரக ஆவணங்களை உளவு பார்த்து, ரகசிய தகவல்களை வெளியிட்டதாக 2010 ல் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனையடுத்து

இந்த செய்தியை கேட்க

லண்டன் : சிறையில் தண்டனை பெற்று வரும் விக்கிலீஸ் நிறுவனர் ஜூனியன் அசாஞ்சே, சிறையில் இறந்து விடுவாரோ என அச்சம் தெரிவித்து 60 டாக்டர்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.



latest tamil news


ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே (48), பிற நாட்டு ராணுவ மற்றும் தூதரக ஆவணங்களை உளவு பார்த்து, ரகசிய தகவல்களை வெளியிட்டதாக 2010 ல் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கு அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டன் போலீசார் அசாஞ்சேவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அசாஞ்சே மீதான பாலியல் வழக்குகளை கைவிடுவதாக சுவீடன் தெரிவித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில் சிறையில் அசாஞ்சேவின் உடல் மற்றும் மனநிலை மிகவும் மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அவர் சிறையிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவித்து 60 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீதி பட்டேலுக்கு 116 பக்க கடிதம் அனுப்பி உள்ளனர். அசாஞ்சேவை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-நவ-201918:55:15 IST Report Abuse
Sampath Kumar நன்றி சிடிஸின் சார்
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
25-நவ-201915:56:38 IST Report Abuse
dandy சுடலையை ஒரு அறிக்கை விட சொல்லுங்கள் ...உடனே விடுதலை செய்து விடுவார்கள் ..கோல் மால் புரத்தில் வீட்டில் இடம் கொடுக்கலாம் ...உலகெங்கும் இருந்து நிருபர்கள் குவிவார்கள்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-நவ-201920:01:59 IST Report Abuse
Sanny ஏண் உங்களுக்கு சுடலைப்பற்றியே கருத்து, சொந்த கருத்து வராதா? ஒண்ணுமட்டும் புரியுது ஏதோ சொந்தப்பிரச்சனையால் சுடலையால் உன்னால் தூங்க முடியவில்லை என்று....
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
25-நவ-201911:10:10 IST Report Abuse
Karthik மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றி 175 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வைத்துவிடுவார்கள் போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X