இந்த செய்தியை கேட்க
லண்டன் : சிறையில் தண்டனை பெற்று வரும் விக்கிலீஸ் நிறுவனர் ஜூனியன் அசாஞ்சே, சிறையில் இறந்து விடுவாரோ என அச்சம் தெரிவித்து 60 டாக்டர்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே (48), பிற நாட்டு ராணுவ மற்றும் தூதரக ஆவணங்களை உளவு பார்த்து, ரகசிய தகவல்களை வெளியிட்டதாக 2010 ல் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கு அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டன் போலீசார் அசாஞ்சேவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அசாஞ்சே மீதான பாலியல் வழக்குகளை கைவிடுவதாக சுவீடன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறையில் அசாஞ்சேவின் உடல் மற்றும் மனநிலை மிகவும் மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அவர் சிறையிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவித்து 60 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீதி பட்டேலுக்கு 116 பக்க கடிதம் அனுப்பி உள்ளனர். அசாஞ்சேவை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE