நள்ளிரவில் பட்னாவிஸ்-அஜித் பவார் ஆலோசித்தது என்ன?

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை : மகாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு எதிராக சிவசேனா-தேசியவாத காங்- காங்., கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இன்று (நவ.,25) உத்தரவு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.,24) நள்ளிரவு 11 மணியளவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வர் அஜித் பவாரும் சந்தித்து பேசி உள்ளனர்.முதல்வர் பட்னாவிஸ் வீட்டிற்கு சென்ற அஜித் பவார், சுமார் 40

இந்த செய்தியை கேட்க

மும்பை : மகாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு எதிராக சிவசேனா-தேசியவாத காங்- காங்., கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இன்று (நவ.,25) உத்தரவு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.,24) நள்ளிரவு 11 மணியளவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வர் அஜித் பவாரும் சந்தித்து பேசி உள்ளனர்.



latest tamil news


முதல்வர் பட்னாவிஸ் வீட்டிற்கு சென்ற அஜித் பவார், சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது பா.ஜ., மூத்த தலைவர்களான சந்திரகாந்த் பாட்டில், வினோத் தவாதே, கிரிஷ் மகாஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இன்று சுப்ரீம் கோர்ட்டில் மகாராஷ்டிரா அரசியல் தொடர்பான வழக்கு இன்று விசசரணைக்கு வர உள்ளது, மகாராஷ்டிரா அமைச்சரவையில் அஜித் பவார் கட்சிக்கு எத்தனை இடங்கள், என்னென்ன துறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



ஆனால் இது வழக்கமான சந்திப்பு தான் எனவும், நம்பிக்கை ஓட்டெடுப்பு மற்றும் அரசு குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாக பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது. பட்னாவிசை சந்தித்த பிறகு டுவீட் செய்த அஜித் பவார், தான் தற்போதும் தேசியவாத காங்., கட்சியிலேயே உள்ளதாகவும், சரத் பவார் தான் தனது தலைவர் எனவும், பா.ஜ., - தேசியவாத காங்., இணைந்து மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை தரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதை மறுத்துள்ள சரத் பவார், மக்களை திசை திருப்பி குழப்பம் ஏற்படுத்தவே அஜித் பவார் இவ்வாறு பேசி உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். தேசியவாத காங்., கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் மகாராஷ்டிர அரசியலில் மற்றொரு குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-நவ-201913:22:42 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நீங்க கலக்குங்க ப்ரோ
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
25-நவ-201912:46:35 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பிஜேபியை அசிங்கப் படுத்த அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல் தான் அஜித் பவர்.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25-நவ-201911:50:52 IST Report Abuse
PANDA PANDI நள்ளிரவு வேளையில் உங்களை விட்டால் வேரறு.
Rate this:
arvind - coimbatore,இந்தியா
25-நவ-201911:54:37 IST Report Abuse
arvindரஹ்மான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X