பெரும்பான்மை: பா.ஜ.,வுக்கு 14 நாள் அவகாசம்

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி : மஹாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு, அம்மாநில கவர்னர் 14 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாக பட்னாவிஸ் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் நாளை (நவ.,26) காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சுப்ரீம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மஹாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு, அம்மாநில கவர்னர் 14 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாக பட்னாவிஸ் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.latest tamil news


மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் நாளை (நவ.,26) காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து ஏஎன்ஐ செய்திய நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.,வின் பட்னாவிஸ் தரப்பு பிரதிநிதியுமான முகுல் ரோஹத்கி, தேசியவாத காங்.,ன் அஜித் பவார், 54 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை எங்களிடம் அளித்தார்.
இதனால் 170 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு அடங்கிய கடிதத்தை கவர்னரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி ஆட்சி திரும்பப் பெறப்பட்டு, பதவியேற்பு நடந்தது.


latest tamil newsசரத் பவார் அவர்கள் பக்கமும், அஜித் பவார் எங்கள் பக்கமும் உள்ளனர். இது அவர்களின் குடும்ப விவகாரமாக இருக்கலாம். இதில் அவர்கள் குற்றம்சாட்டுவது போல் குதிரை பேரம் ஏதும் இல்லை. அந்த 3 கட்சிகளும் தான் குதிரை பேரம் நடத்த முயற்சிக்கின்றன. அதை பழி போடுகின்றன. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிசுக்கு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் கவர்னர்.
தற்காலிக சபாநாயகரை நியமிப்பது, எம்எல்ஏ.,க்கள் பதவியேற்பது, சபாநாயகரை தேர்வு செய்வது ஆகியன தான் இப்போது மிக முக்கியம். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியும். அதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கான அவகாசத்தை 2 அல்லது 3 நாட்களாக குறைக்க முடியாது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
25-நவ-201922:40:31 IST Report Abuse
muthu Rajendran பாத்து பாத்து கொடுக்கணுமில்லே அழைப்பிதழை
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
25-நவ-201918:24:52 IST Report Abuse
jagan 14 நாள் ? கழு தை (இதுங்களை குதிரை என்று சொல்லி குதிரைகளை அவமான படுத்த கூடாது) பேரத்திற்கு நிறைய நேரம் தேவைப்படுது போல....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-நவ-201907:29:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கழுதைங்க மட்டும் என்ன பாவம் பண்ணித்து?...
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
25-நவ-201917:02:11 IST Report Abuse
Rahim Gani அசீத்த்து பவாரு மேல தொடரப்பட்ட 70000 ஆயிரம் கோடி நீர்பாசன துறை ஊழல் வழக்கில் ஆதாரம் இல்லை னு போலீஸ் கேச ஊத்தி மூடிடுச்சாமே இது தெரியுமா ???
Rate this:
Gopi - Chennai,இந்தியா
25-நவ-201918:46:41 IST Report Abuse
Gopiஏன் அந்த தில்லாங்கடிங்க கூட கூட்டு வைக்க பிஜேபி க்கு முன்னாடி சிவசேனாவும் காங்கிரசும் முண்டியடித்து ஓடின...
Rate this:
Rahim Gani - Karaikudi,இந்தியா
25-நவ-201920:02:13 IST Report Abuse
Rahim Ganiநீங்க தான் யோக்கியர்களாயிற்றே இப்போ ஏன் அஜீத்து கூட கூட்டாஞ்சோறு ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X