புஷ்கர்-ஒட்டகதிருவிழா| chennai | Dinamalar

புஷ்கர்-ஒட்டகதிருவிழா

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (1) | |
தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் மணிவண்ணன் ராமச்சந்திரன்.ஒவியத்தையும் புகைப்படத்தையும் ஒரு சேரக்கற்றுக்கொண்ட இவர் தான் எடுக்கும் படங்களிலும் ஒவியத்தின் உன்னதத்தை அழகை கொண்டுவருவதில் கெட்டிக்காரர்.ஹம்பி,கோனார்க் போன்ற தொன்மையான இடங்களையும் நமது பாரத கலாச்சார விழாக்களையும் படம் எடுக்க நாடு முழுவதும் பயணம் செய்வது இவருக்கு பிடித்தமானது.ஊரில்latest tamil newsதஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் மணிவண்ணன் ராமச்சந்திரன்.

ஒவியத்தையும் புகைப்படத்தையும் ஒரு சேரக்கற்றுக்கொண்ட இவர் தான் எடுக்கும் படங்களிலும் ஒவியத்தின் உன்னதத்தை அழகை கொண்டுவருவதில் கெட்டிக்காரர்.latest tamil news


ஹம்பி,கோனார்க் போன்ற தொன்மையான இடங்களையும் நமது பாரத கலாச்சார விழாக்களையும் படம் எடுக்க நாடு முழுவதும் பயணம் செய்வது இவருக்கு பிடித்தமானது.latest tamil news


Advertisement

ஊரில் இருக்கும் நாட்களிலும் சும்மாயிருக்கமாட்டார் ‛ஸ்ட்ரீட் போட்டோகிராபி' என்று கிளம்பி எளிய மனிதர்களின் வாழ்வியலை தனது கேமிராவில் அள்ளிக்கொண்டு வருவார்.latest tamil news


பொருளாதார தேவைக்காக திருமணம் போன்ற விழாக்களை படம் எடுக்கும் இவர் பெரும்பாலான நேரங்களில் தனது புகைப்படத்திறமைக்கு தீனி போடும் இடங்களைத் தேடி படமெடுக்க கிளம்பிவிடுவார்.latest tamil news


இவரது திறமையை அறிந்து பல பிரபல நிறுவனங்களும்,அமைப்புகளும் இவரை தற்போது படமெடுக்க பயன்படுத்தி வருகின்றனர்.latest tamil news


மும்பையில் உள்ள ஜாஹாங்கீர் அரங்கத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கவேண்டும் என்பது இவரது கனவு அதற்காக தன்னையும் தனது படங்களையும் மேலும் மேலும் செதுக்கிக் கொண்டு இருக்கும் மணிவண்ணன் ராமச்சந்திரன் சமீபத்தில் புஷ்கரில் நடைபெற்ற ஒட்டகதிருவிழாவிற்கு சென்று வந்துள்ளார்.latest tamil news


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 200 கிலோமீட்டர் துாரத்தில் இருக்கிறது புஷ்கர்.இது கிராமத்திலும் சேராது நகரத்திலும் வராது இரண்டுக்கும் இடைப்பட்ட சிற்றுார்.இங்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஒட்டகசந்தைதான் புஷ்கர் திருவிழாவாகி உள்ளது.பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஒட்டகத்திருவிழாவில் ஒட்டகத்துடன் குதிரைகளும் விற்பனை செய்யப்பட்டாலும் ஒட்டகம்தான் பிரதானமாகவும் பிரமாதமாகவும் விற்பனையாகிறது.ஒட்டகமும் அதன் உரிமையாளர்களும் உடுத்தியிருக்கும் வண்ண உடைகள் இந்த விழாவினை வண்ணமயமான விழாவாக்கி வைத்திருப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.சுற்றுலா பயணியர் வருகையை அடுத்து இங்குள்ள சுற்றுலா துறையினர் கலைவிழாக்கள் பல நடத்தி இந்த பத்து நாட்களை சுற்றுலா விழாவாக்கி விடுகி்ன்றனர்.ஓட்டகத்தை அவர்கள் அழகு படுத்தும் விதமும் அதன் அழகும் ரகமும் விதவிதமானது ஒட்டக உரிமையாளர்களின் குடும்பத்தினரும் அவர்களது பழக்க வழக்கங்கள் உடைகள் என எல்லாமே சுற்றுலாவாசிகளுக்கு உவப்பானவை மட்டுமல்ல அவர்களின் கேமிரா கண்களுக்கு ஈர்ப்பானவையும் கூடமணிவண்ணன் ராமச்சந்திரனுக்கு இந்த புஷ்கர் திருவிழாவினை படம் எடுக்கவேண்டும் என்பது பல நாள் கனவு அதை தற்போது நனவாக்கிக் கொண்டுள்ளார்.அவருடன் பேசுவதற்கான எண்:90435 62566.-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X