பொது செய்தி

தமிழ்நாடு

'குட்கா' அதிபர்களிடம் லஞ்சம்; மேலும் சில ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு 'சம்மன்'

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (10)
Advertisement
குட்கா, லஞ்சம்,  ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சம்மன்

சென்னை: 'குட்கா' ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மேலும் சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, 2013ல், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதித்தார். ஆனால், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, மாதவராவ், செங்குன்றம் அருகே, சட்ட விரோதமாக குட்கா தயாரிப்பு ஆலை, குடோன் நடத்தி வந்தார்.இதன் பங்குதாரர்களாக,உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் இருந்தனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்போதைய, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்தின், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், சுகாதாரத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர், முன்னாள்அமைச்சர் ரமணா உள்ளிட்டோர், பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, டி.கே.ராஜேந்திரன், விஜயபாஸ்கர்உள்ளிட்டோரின் வீடுகளில், அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது.மேலும், மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட ஆறு பேரை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள், குட்கா ஊழல் தொடர்பாக, தீவிர விசாரணையில் களமிறங்கி உள்ளனர். டி.கே.ராஜேந்திரன், வரும், 2ம் தேதியும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன், 3ம் தேதியும், விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

இவர்களுடன், ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஜார்ஜ், நல்லசிவம்; தற்போது பணியில் உள்ள, காவல் துறை நவீனமயமாக்கல் துறை ஐ.ஜி., ஸ்ரீதர், மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜு, திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் ஆகிய, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

விழுப்புரம் எஸ்.பி., ஜெயகுமார், வணிக புலனாய்வு பிரிவு எஸ்.பி., விமலா ஆகியோரும், இப்பட்டியலில் உள்ளனர். இவர்களிடம், இரண்டு கட்டங்களாக விசாரிக்க, அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
26-நவ-201911:07:48 IST Report Abuse
Varun Ramesh ஆட்டோக்காரர்கள் மீட்டருக்கு மேல் கட்டணம் கேட்டால், தனிமனிதன் சாராயம் விற்றால், ஆம்னி பஸ்காரர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட விரோதம். அரசு பேருந்துகள் கட்டுப்பாடற்ற கட்டணம் வசூலித்தால், தக்கல், பிரிமியம் தக்கல், சுவிதா எக்ஸ்பிரஸ் என்று வித விதமாக பெயர் வைத்து இந்தியன் ரயில்வே கட்டண கொள்ளையில் ஈடுபட்டால், அரசே சாராயம் விற்றால், மக்களின் வரிப்பணத்தில் ஐ.பி.எஸ் படித்தவர்கள் சட்ட விரோத செயல்களை செய்தால், ஒன்று சட்டம் கண்டுகொள்வதில்லை அல்லது நத்தை வேகத்தில் நடவடிக்கை. இது ஜனநாயகத்தின் மறுபக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
26-நவ-201910:47:21 IST Report Abuse
Suri இதை வைத்து சாணக்கியன் எதை சாதிக்க போகிறான்? எதை அடைய போகிறான்? எப்படி அடிமை அண்ணா தி மு கவின் சிண்டை ஆட்டுவான்?? ஒரு வேலை மேயர் தேர்தல் சட்ட மாற்றம் தான் காரணமா??
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-நவ-201908:20:06 IST Report Abuse
ஆரூர் ரங் கூட்டணியாவது மண்ணாவது ஒரேயொரு திராவிஷன்கூட வெளியே இருக்கக்கூடாது .ஊழல்வாதிகளை பிரிச்சு மேஞ்சிடுங்க .ஐம்பது வருஷமா ஆட்டயபோடறாங்க .அதுக்கு முடிவு கட்டியே ஆகணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X