காங்., கூட்டணி கட்சிகள் பதவி வெறியில் அலைகின்றன: பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி காரசாரம்

Updated : நவ 27, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement
PM,Modi,பிரதமர், மோடி, காங்., கூட்டணி, கட்சிகள், பதவி வெறி, அலைகின்றன

டால்தோன்கஞ்ச்: மஹாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் பல்வேறு நாடகங்கள் அரங்கேறி வரும் நிலையில், ''காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பதவி வெறி பிடித்து, ஆட்சி அதிகாரத்துக்கு அலைகின்றன,'' என, ஜார்க்கண்டில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


ஐந்து கட்டம்


ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், சட்டசபைக்கு, வரும், 30ல் இருந்து, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

டால்தோன்கஞ்சில் நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் செய்வது, கொள்ளையடிப்பது போன்றவற்றில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தி வந்தது. ஆனால், பா.ஜ., அரசு அமைந்த பிறகு தான், வளர்ச்சி என்பதை மக்கள் அனுபவிக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் உயர்ந்த ஆதாரங்களை காங்., கொள்ளையடித்து விட்டது. அதே நேரத்தில் மக்களின் நலனை மட்டுமே பா.ஜ., பார்க்கிறது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, அயோத்தி விவகாரம் போன்றவற்றில் எப்போதோ தீர்வு கண்டிருக்கலாம்.


முயற்சி


ஆனால், ஓட்டுக்காக இந்தப் பிரச்னைகள் தொடர்ந்து இருக்கும்படி காங்., பார்த்துக் கொண்டு இருந்தது.மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அமைவதால், மாநில மக்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். இதை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மூலம் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றன.

காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பதவி வெறி பிடித்து, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக முயற்சிக்கின்றன. இது, மக்கள் மீதான அக்கறையால் அல்ல; தங்களுடைய சுயநலத்துக்காக அவை அலைகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
27-நவ-201911:45:24 IST Report Abuse
Raman Muthuswamy இந்தியா பூராவுமாக ... மயமாக்க வேண்டும் என்ற நினைப்பில் முதல் அடி மஹா-வில்.. உத்தர பிரதேஷில் என்ன முன்னேற்றம் அரங்கேறியது லிஞ்சிங் போலீஸ் வேட்டை/படு கொலையைத் தவிர? பிஹாரில் அரசா நடக்கிறது.. அக்கிரமச் செயல்களே இனி வரும் தேர்தல்களில் ..யின் பாச்சா பலிக்காது பதவி மோகம் பிடித்து அலைவது யார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து உள்ளனர் .. விளக்கம் .. வியாக்யானம் தேவை இல்லை ..
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா முதல்வர் பதவி வேண்டும் என்று பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன் சொல்லியிருந்தால், அனைத்து தொகுதிகளிலும் பாஜக நின்று முதல்வர் நாற்காலியை பிடித்திருக்கும். ஏனென்றால் பெரும்பான்மை மக்கள் ஆதரவு பாஜக வுக்குதான். நரிதந்திரம் கொண்ட சிவசேனா அங்குள்ள சிறுபான்மையினரையும் நசுக்க முயலும், அப்போது மீண்டும் மும்பையின் வரலாறு திரும்பும்.
Rate this:
Anandan - chennai,இந்தியா
29-நவ-201900:16:16 IST Report Abuse
Anandanமக்கள் பிஜேபி பக்கம் என்றால் பிஜேபி சிவசேனையுடன் கூட்டணி அமைத்திருக்க வாய்ப்பே இல்லை....
Rate this:
Anandan - chennai,இந்தியா
29-நவ-201900:17:06 IST Report Abuse
Anandanமகாராஷ்டிரத்தில் மக்கள் பிஜேபி பக்கம் என்றால் சிவசேனையுடன் கூட்டணி அமைத்திருக்கவே மாட்டார்கள் பிஜேபி தலைவர்கள். அவர்கள் என்ன அறிவற்றவர்களா?...
Rate this:
Cancel
Nagarajan R -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-201919:29:32 IST Report Abuse
Nagarajan R கர்நாடகாவில் ஒரு தடவை குட்டு வாங்கியபிறகும் மகா.விலும் பிஜேபி யை செய்யச் சொன்னது காங்.தான்னு சொல்லுகிறார் மோடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X