பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறையில் தமிழ் மயம்: டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (8)
Advertisement
police, Tamil, DGP, காவல் துறை, தமிழ் மயம், டி.ஜி.பி., திரிபாதி, உத்தரவு

சென்னை: 'காவல் துறையில், கடிதப் போக்குவரத்து உட்பட, அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் உட்பட, அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரக அதிகாரிகள், டி.ஜி.பி., அலுவலகத்தில், இம்மாதம், 7ம் தேதியில் இருந்து, மூன்று நாட்கள், தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.


அறிவுரை


இதையடுத்து, காவல் துறையில், பதிவேடுகள் அனைத்தும், தமிழில் பராமரிக்கப்பட வேண் டும். போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் என, அனைத்து பணியாளர்களும், வருகை பதிவேட்டில், தமிழில் கையெழுத்திட வேண்டும். மேலும், கடிதப் போக்குவரத்து, குறிப்பாணைகள் தமிழில் எழுதப்பட வேண்டும். காவல் துறைக்கு சொந்தமான அனைத்து வாகனங்களிலும், 'காவல்' என, தமிழில் எழுதி இருக்க வேண்டும். அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.


சுற்றறிக்கை


இந்த அறிவுரையை, மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள், காவல் துறையில் உள்ள, அனைத்து பணியாளர்களும் பின்பற்றும் வகையில், நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Sekhar - Nullivilai Sydney,ஆஸ்திரேலியா
26-நவ-201909:48:17 IST Report Abuse
V.Sekhar சிறு துளி பெருவெள்ளம். சிறியதாக ஆரம்பித்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள். அனைத்து துறைகளும் இதை பின்பற்றினால் தமிழ் தானாக வளரும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201908:08:51 IST Report Abuse
Tamilan திராவிட பூமி தமிழ்நாடு. இங்கு தமிழினவாதத்திற்க்கோ இடமில்லை. தமிழர்களின் தமிழ் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வட இந்தியர்களின் பிரித்தாளும் முயற்சி தமிழகத்தில் எடுபடாது
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201908:06:00 IST Report Abuse
Tamilan தமிழநாட்டில் பிளவை ஏற்படுத்தும் வட இந்தியர்களின் நீண்ட கால திட்டமிட்ட சதி இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X