காவல் துறையில் தமிழ் மயம்: டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறையில் தமிழ் மயம்: டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (8)
Share
police, Tamil, DGP, காவல் துறை, தமிழ் மயம், டி.ஜி.பி., திரிபாதி, உத்தரவு

சென்னை: 'காவல் துறையில், கடிதப் போக்குவரத்து உட்பட, அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் உட்பட, அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரக அதிகாரிகள், டி.ஜி.பி., அலுவலகத்தில், இம்மாதம், 7ம் தேதியில் இருந்து, மூன்று நாட்கள், தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.


அறிவுரை


இதையடுத்து, காவல் துறையில், பதிவேடுகள் அனைத்தும், தமிழில் பராமரிக்கப்பட வேண் டும். போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் என, அனைத்து பணியாளர்களும், வருகை பதிவேட்டில், தமிழில் கையெழுத்திட வேண்டும். மேலும், கடிதப் போக்குவரத்து, குறிப்பாணைகள் தமிழில் எழுதப்பட வேண்டும். காவல் துறைக்கு சொந்தமான அனைத்து வாகனங்களிலும், 'காவல்' என, தமிழில் எழுதி இருக்க வேண்டும். அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.


சுற்றறிக்கை


இந்த அறிவுரையை, மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள், காவல் துறையில் உள்ள, அனைத்து பணியாளர்களும் பின்பற்றும் வகையில், நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X