மஹா., முதல்வர் பதவியிலிருந்து பட்னவிஸ் ராஜினாமா

Updated : நவ 26, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் ஆட்சியில் தொடர போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக பட்னவிஸ் அறிவித்துள்ளார். ஆதரவை தொடர முடியாது என அஜித் பவார் அறிவித்ததை தொடர்ந்து பதவி விலகுவதாக தெரிவித்தார். மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., மற்றும் சிவசேனா உள்ளிட்ட
Supreme Court, order, Maharashtra, government, formation, மஹா., எதிர்க்கட்சிகள், மனு ,இன்று காலை, 10:30 தீர்ப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் ஆட்சியில் தொடர போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக பட்னவிஸ் அறிவித்துள்ளார். ஆதரவை தொடர முடியாது என அஜித் பவார் அறிவித்ததை தொடர்ந்து பதவி விலகுவதாக தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அமைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. திடீர் திருப்பமாக, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன், 23ல், பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வராக, பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இதை எதிர்த்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அதில் கூறப்பட்டதாவது: பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இல்லாத நிலையில், தேவேந்திர பட்னவிசுக்கும், அஜித் பவாருக்கும், கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது செல்லாது. இந்த விஷயத்தில் குதிரை பேரத்தை தவிர்க்க, 24 மணி நேரத்துக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் பட்னவிசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டது. இந்த மனு, நேற்று முன்தினம் அவசர மனுவாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கை, நேற்றைய தேதிக்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

முதல்வராக பட்னவிஸ் பதவிஏற்றதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் செவ்வாய் காலை தீர்ப்பளித்தது. ''மகாராஷ்ட்ராவில் நடக்கும் நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளது; ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு கோர்ட்டுக்கு உண்டு; சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்துவதுதான் ஒரே வழி; பட்னவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்; 27ம்தேதி மாலை 5 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, நேற்று காலை, இந்த மனு, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டதற்கான கடிதம், தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தது தொடர்பாக அஜித் பவார் கொடுத்த கடிதம், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக, பட்னவிஸ் கொடுத்த கடிதங்களை, 'சீலிடப்பட்ட' கவரில் வைத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடியதாவது: அஜித் பவார், கவர்னரிடம் தாக்கல் செய்த கடிதத்தில் என்ன இருக்கிறது... தேசியவாத காங்., கட்சியின் சட்டசபை தலைவராக அஜித் பவாரை தேர்வு செய்து, அந்த கட்சியின், 54 எம்.எல்.ஏ.,க்களும் கையெழுத்திட்டது தானே, இந்த கடிதம்... பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளிப்பதாக, தேசியவாத காங்., கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.,யாவது கூறியுள்ளாரா... ஜனநாயகத்தை ஏமாற்றும் முயற்சி இது. பெரும்பான்மையை நிரூபிப்பது சரி என, அனைத்து தரப்பினரும் கூறியுள்ள நிலையில், அதற்கான உத்தரவை பிறப்பிப்பது தான் சரியாக முடிவாக இருக்கும். இவ்வாறு, அவர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா கூறியதாவது: தேசியவாத காங்., கட்சியையும் சேர்த்து, பா.ஜ.,வுக்கு, 170 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மை இருப்பதாக, சம்பந்தபட்ட கட்சியின் சட்டசபை தலைவர் கடிதம் அளித்தால், அவரை ஆட்சி அமைக்க அழைப்பது, கவர்னரின் கடமை. இதன் அடிப்படையில் தான், பட்னவிசுக்கும், அஜித் பவாருக்கும், கவர்னர், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக விசாரிக்க வேண்டிய அவசியம், கவர்னருக்கு இல்லை. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க, கூடுதலாக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசேனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தன் வாதத்தில் கூறியதாவது: அஜித் பவார், தேசியவாத காங்., கட்சியின் சட்டசபை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வமான, 'அபிடவிட்' எங்களிடம் உள்ளது. எனவே, சபையின் மூத்த உறுப்பினரை சபாநாயகராக நியமித்து, உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் பட்னவிசுக்கு உத்தரவிட வேண்டும். சபை நடவடிக்கைகளை, வீடியோ எடுக்க வேண்டும். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தபட்டதில் பாரபட்சம் உள்ளது. அதிகாலையில், ஜனாதிபதி ஆட்சியை விலக்கி, காலை, 8:00 மணிக்கு, முதல்வராக பட்னவிஸ் பதவியேற்கும் அளவுக்கு, என்ன அவசரம் இருக்கிறது. மஹாராஷ்டிராவில் தற்போது நடந்தது போல், இதற்கு முன் எப்போதும் நடந்தது இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

மஹாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான, முகுல் ரோஹத்கி வாதாடியதாவது: கவர்னருக்கு என சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. எனவே, பெரும்பான்மையை, 24 மணி நேரத்துக்குள் நிரூபிக்கும்படி உத்தரவிட வேண்டும் என, கவர்னரிடம், நீதிமன்றம் கூற முடியாது. இவ்வாறு, அவர் வாதாடினர்.

அப்போது, அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது: சட்டசபையில், 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிகழ்வுகள், ஏற்கனவே பல வழக்குகளில் நடந்துள்ளன. தற்போதைய நிலையில், பட்னவிஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பது தான், எங்கள் கேள்வி. பெரும்பான்மை உள்ளதா என்பதை, கவர்னர் முடிவு செய்ய முடியாது. சட்டசபையில் நடக்கும் ஓட்டெடுப்பு தான் முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

அஜித் பவார் சார்பில் ஆஜரான, மணீந்தர் சிங், ''நவம்பர், 22ம் தேதியை பொறுத்தவரை, தேசியவாத காங்., கட்சியின் சட்டசபை தலைவர் அஜித் பவார் தான். அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தான், அவர் கவர்னரிடம் கொடுத்தார். அதன் அடிப்படையில் தான், கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். அஜித் பவார் தான், தேசியவாத காங்., கட்சியின் பிரதிநிதி,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருமே, அரசியல் ரீதியாக வேறுபட்ட கருத்தை தெரிவித்தாலும், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, ஒரு மனதாக ஏற்றுள்ளனர். நாளை மாலை 5 மணிக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அஜித் பவார் ராஜினாமா

இதனையடுத்து, துணை முதல்வர் அஜித் பவார், முதல்வர் பட்னவிசை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.


பட்னவிசும் ராஜினாமா

இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் பட்னவிஸ், பா.ஜ., சிவசேனா கூட்டணிக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். தனிப்பெரும் கட்சியான பா.ஜ.,வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை உள்ளது. சிவசேனாவை விட பா.ஜ., கூடுதல் தொகுதிகளை பெற்றது. சிவசேனா பேரம் பேசும் வியூகத்தை கையாண்டது. முதல்வர் பதவி வழங்குவோம் என சிவசேனாவுக்கு எப்போதும் வாக்கு அளிக்கவில்லை. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா மிரட்டல் விடுத்தது.தேர்தல் முடிவு வெளியாகி, பா.ஜ.,வுக்கு சீட்கள் குறைந்த உடனே சிவசேனா மற்ற கட்சிகளுடன் பேச ஆரம்பித்து விட்டது. பொய் சொல்லி, பா.ஜ.,வை காத்திருக்க வைத்தது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆதரவு கேட்டு மற்ற கட்சிகளிடம் கெஞ்ச துவங்கியது. பால் தாக்கரே குடும்பத்தினர் மற்ற கட்சிகளிடம் கெஞ்சினர். ஆதரவை தொடர முடியாது என அஜித் பவார் கூறிவிட்டதால்,பதவி விலகுகிறேன்.
எங்களிடம் போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லை. இதனால் பதவி விலகுகிறேன். ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அளிக்க உள்ளேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைகுழு தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்த காரணத்தினால் தான் பதவி ஏற்றோம். வெவ்வேறு கொள்கைகளை கொண்டது சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி. சட்டசபையில் பா.ஜ., எதிர்க்கட்சியாக செயல்படும்.கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டோம். அடுத்து அமையும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆட்சி நிலையான ஆட்சி அமையாக இருக்காது.புது அரசு, நெருக்கடியின் கீழ் தான் செயல்படும். அதிகாரத்திற்காக அலையும் சிவசேனா, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கவர்னரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை பட்னவிஸ் கொடுத்தார்.


மும்பை நட்சத்திர ஓட்டலில் எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு


மும்பை புறநகர் பகுதியில் உள்ள,'கிராண்ட் ஹயாத்' என்ற நட்சத்திர ஓட்டலுக்கு,நேற்று இரவு, காங்.,தேசியவாத காங்.,மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். இதில், 162 எம்.எல்.ஏ.,க்கள் இருந்ததாக, அந்த கட்சியினர் தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்கள் முன், அவர்களை அணி வகுக்கச் செய்து, ஆட்சி அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் ஆதரவு, தங்களுக்கு உள்ளதாக, இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் அறிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில்,''இனியாவது, பா.ஜ., தலைவர்கள், உண்மையை உணர்ந்து, நாங்கள் ஆட்சி அமைக்க வழி விட வேண்டும்,'' என்றார்.

தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறுகையில்,''பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும், தேசியவாத காங்., உறுப்பினர்கள், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தங்கள் பதவியை இழக்க நேரிடும். எனவே, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள், இங்கு வந்து விட வேண்டும். கோவா, கர்நாடகா போல், மஹாராஷ்டிராவில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது,'' என்றார்.

இந்த நிகழ்வில், உத்தவ் தாக்கரே, சரத் பவார், சோனியா ஆகியோரின் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக, மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களும் உறுதி மொழி ஏற்றனர்.
அஜித் பவாருடன் கூட்டணியா? சரத் பவார் திட்டவட்ட மறுப்பு


தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு அஜித் பவார் ஆதரவு அளித்ததன் பின்னணியில், நான் இருப்பதாக, சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர்; அப்படி எதுவுமே இல்லை. அஜித் பவார் எடுத்த முடிவுக்கும், தேசியவாத காங்., கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவசேனா தலைமையில், காங்., தேசியவாத காங்., கட்சிகள் இணைந்து, கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைக்கும். தற்போதைய நிலையில், அஜித் பவாருக்கும், எனக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


அஜித் பவாருக்கு அழைப்பு!


தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:கவர்னர் அனுமதி அளித்தால், எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், அவர் முன் அணிவகுப்பு நடத்தவும் தயாராக உள்ளோம். தேசியவாத காங்கிரசின், 54 எம்.எல்.ஏ.,க்களில், 51 பேரின் ஆதரவு கடிதங்கள் எங்களிடம் உள்ளன. அஜித் பவார் வசம் இருந்த மூன்று பேர், எங்களிடம் வந்து விட்டனர். அஜித் பவாரும், எங்களிடம் வர வேண்டும். அவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இது தொடர்பாக, சக்கன் புஜ்பாலை, அவரிடம் பேசும்படி கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


சிவசேனா, தேசியவாத காங்., கவர்னரிடம் மனு


பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே, நேற்று, சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மும்பையில், கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தனர்.

அப்போது, தங்களுக்கு, 162 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, அவர்கள் கையொப்பமிட்ட கடிதங்களை அளித்தனர். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படியும், கவர்னரிடம் வலியுறுத்தினர்.

கவர்னரை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:முதல்வர் பட்னவிஸ், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், அடுத்த கட்டமாக எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, கவர்னரிடம் கூறியுள்ளோம். சிவசேனா, காங்., தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்களுடன், சுயேச்சை மற்றும் இதர கட்சிகளின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
26-நவ-201921:18:41 IST Report Abuse
RajanRajan வானமே எல்லை என அதிகார வரம்பை உச்ச நீதிமன்றம் கூறுகிறது. ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் எங்களின் பிறப்புரிமை அதற்கும் வானமே எல்லை என சாதிக்கிறாங்க. நல்ல போட்டி சட்டத்திற்கும் ஊழலுக்கும். இடையில் வரும் குமாரசாமி கல்குலேட்டரை இந்த நீதிமன்றத்தால் கண்டிக்க முடியவிவ்வை அந்த வானளாவிய அதிகார வர்கத்தால்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-நவ-201921:05:30 IST Report Abuse
RajanRajan ப.ஜா வுக்கு கட்டுமரம் அளவுக்கு கிரிமினல் புத்தி, சித்து வேலை எல்லாம் பத்தாது. அத்தனை செப்டி வித்தை பண்ணி ஏமாத்து வேலைகள் வரை பண்ணினா தான் நம்ம ஜனநாயகத்தை குறிப்பா தமிழகத்தை ஆள முடியும் அந் அளவுக்கு மக்களின் குணாதிசயங்கள் ஊழல்வாதிகளாலே ஜனநாயகம் என்ற பெயரில் சேதாரபடுத்தபட்டு விட்டது. இத்தனை இக்கட்டை தாண்டி நல்லாட்சி பெற காமராஜ் அல்ல கக்கன் வந்தாலும் முடியாத ஒரு ஜனநாயக அவலத்தில் வாழ்கிறோம்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
26-நவ-201918:44:58 IST Report Abuse
jagan இவர்கள் வெளியில் நின்று இந்த மூன்று கட்சிகளும் அடித்து கொள்வதை வேடிக்கை பார்த்து இருக்க வேண்டும். மறு தேர்தல் ஒரு வருடத்திற்குள் நிச்சயம். அப்போ முழு மெஜாரிடியில் வந்திருக்கலாம். குறுக்கு வழியில் சென்று பெயர் கெடுத்து கொண்டாகிவிட்டது. மறு தேர்தலில் வெற்றி இப்போ நிச்சயம் இல்லை. ஒரு வருடம் ஒன்னும் பெரிய டைம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X