அரசியல் செய்தி

தமிழ்நாடு

காகிதமில்லா சட்டசபையை உருவாக்க அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி

Updated : நவ 26, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
காகிதமில்லா சட்டசபை, அலுவலர், 2 நாட்கள், பயிற்சி

சென்னை: தமிழகத்தில், காகித பயன்பாடு இல்லாத சட்டசபையை உருவாக்க, அதன் செயலக ஊழியர்களுக்கான, இரண்டு நாள் பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.

சென்னை, தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபால், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக சட்டசபை செயலகத்தை, கணினிமயமாக்கியவர் ஜெயலலிதா. அவர் வழியில் நடக்கும் ஆட்சியில், 'காகிதமில்லா சட்டசபை' என்ற திட்டத்தை செயல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால், காகிதப் பயன்பாடு, வெகுவாக குறையும். தபால் செலவு உள்ளிட்ட, இதர செலவுகளும் குறைக்கப்படும்; சேமிப்பு அதிகரிக்கும். இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், சட்டசபை நடக்கும் நாட்களில், சபை நிகழ்ச்சி நிரல், வினா பட்டியல், மானிய கோரிக்கைகளின், கொள்கை விளக்க குறிப்புகள், குழு கூட்டங்கள் குறித்த குறிப்புகள், 'இ - மெயில்' வழியே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அனுப்பி வைக்கப்படும்.சட்டசபையில் வைக்கப்படும் ஏடுகள் மற்றும் ஆவணங்களும், கணினி ஆவண வடிவில், அனுப்பி வைக்கப்படுகின்றன.

எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக, 14 மற்றும், 15வது சட்டசபையின் நடவடிக்கை குறிப்புகள், சபாநாயகர் தீர்ப்புகள், குறிப்புகள் அடங்கிய தொகுப்பு, சட்டசபை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், எம்.எல்.ஏ.,க்களின் வாழ்க்கை குறிப்புகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகத்தின் அறிவுரைபடி, 'நேவா' இணையதளத்தில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் விபரம், கூட்டத்தொடர் குறித்த தகவல்கள், சபை நடவடிக்கை குறிப்புகள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாநில அளவில், 'நேவா' திட்டத்தை செயல்படுத்த, மாநில திட்ட மேலாண்மை பிரிவு மற்றும் சபாநாயகர் தலைமையில், குழு அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து, அலுவலர்களுக்கு, இரண்டு நாட்கள், பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

சட்டசபை செயலர் சீனிவாசன் பேசியதாவது: ஜனவரி மாதம் நடக்க உள்ள, சட்டசபை கூட்டத்தொடரில், சபையில் வைக்கப்படும் ஏடுகள் அனைத்தையும், 'இ - மெயில்' வழியே, எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சராசரி குடிமகன், தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, சட்டசபை செயல்படும் விதம் தொடர்பான விபரங்களை, விரல் நுனியில் பெறுவது தான் இதன் நோக்கம். இவ்வாறு, அவர் பேசினார்.

பயிற்சி முகாம் துவக்க விழாவில், துணை சபாநாயகர் ஜெயராமன், மின் ஆளுமை நிறுவனம் ஆணையர் சந்தோஷ் கே மிஸ்ரா, 'நேவா' ஒருங்கிணைப்பாளர் ஆர்பிட் தியாகி பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-நவ-201913:37:02 IST Report Abuse
elakkumanan எங்க தலையை எங்கேயுமே பேச விட கூடாதுன்னு எல்லா லெவலில் செயல்படுகிறார்கள். துண்டு சீட்டு என்பது பேப்பராக இல்லாமல், கையில் எழுதி வைத்தாவது பேசி:உங்களை தொடர்ந்து மகிழ்விப்பேன் என்பதை தோன்றிய போதே ...............இட் ஐஸ் cried .............................................
Rate this:
Share this comment
Cancel
26-நவ-201907:51:23 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து ""காகிதமில்லா சட்டசபை"" இது ..எங்கள் சுடலையின் பேச்சாற்றலை தடுக்க ,மறைக்க நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் திராவிட இயக்க வரலாற்றை அழிக்க நினைக்கும் சதியின் ஒருபகுதி ...இது சிறுபான்மையினருக்கு கேடாய் முடியும் ...சமூக நீதி மண்ணோடு மண்ணாகும் ,இதனால் திமுகவை அழிக்க முடியாது திமுக தினவெடுத்த தோள்களுடன் போர்க்கோலம் கொண்டு எழும் இதுகுறித்து தளபதியும் டி ஆர் பாலுவும் ஐநா சபைக்கு சென்று மனித உரிமை கமிஷனில் மனு கொடுப்பார்கள் இது மனிதர்களை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல சட்டசபை காகிதத்தை தின்று உயிர்வாழும் கழுதைகள் இனி என்ன செய்யும் பட்டினியில் மடியும் கழுதை இனத்தை காக்க ஜெழுத்தை இனமே வீறுகொண்டு எழு காகிதமில்லா சட்டசபை சர்வாதிகாரத்தை எதிர்த்து கழக தொண்டர்கள் அவர்களுக்குரிய கோழி பிரியாணியையும் குவாட்டரையும் பெற்றுக்கொண்டு அங்கங்கே ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்துவார்கள் இந்தமுறை சுடலை சட்டைக்கு பதில் பேப்பரை கிழித்துக்கொண்டு சட்டசபையில் சேவண்டி அடிப்பார் ...ஒட்டாரம் செய்வார் ...கையை காலை உதைத்துக்கொண்டு கதறுவார் ...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
26-நவ-201904:55:32 IST Report Abuse
blocked user துண்டுச்சீட்டு சுடலைக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்... காகிதம் இல்லை என்றால் அவரால் எப்படி பேசமுடியும்? காகிதம் இருந்தே உளறும் ஜப்பான் முதல்வர் காகிதம் இல்லை என்றால் என்னாவார்?
Rate this:
Share this comment
26-நவ-201907:54:49 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்துகாகிதமில்லாமல் மூல பத்திரத்தை எப்படி கொடுப்பது PDF காபி கொடுப்பது பெரியாரின் சமூக நீதிக்கு எதிரானது...அண்ணாவோ பெரியாரோ கம்ப்யூட்டரை உபயோகித்தா தமிழை வளர்த்தார்கள் பகுத்தறிவை நமக்கு ஓடினார்கள்...
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-நவ-201908:25:19 IST Report Abuse
ஆரூர் ரங்அவர் தைரியமாக துண்டுசீட்டிலாமலே பேசலாம் என்னயிருந்தாலும் LIVEவா ஜோக் கேட்பதில் தனி சுகம்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X