குற்ற பின்னணி நபர்கள் தேர்தலில் நிற்க தடை?

Updated : நவ 27, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மூன்று மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பிரபல வழக்கறிஞருமான அஸ்வினி உபத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட, சம்பந்தப்பட்ட
குற்ற பின்னணி, நபர்கள், தேர்தல், நிற்க ,தடை?

புதுடில்லி: குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மூன்று மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பிரபல வழக்கறிஞருமான அஸ்வினி உபத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வாய்ப்பு அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படி உத்தரவிட்டது.

ஆனாலும், தேர்தல் ஆணையம், இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குற்றப் பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரும் இந்த மனுவை, தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து, மூன்று மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
01-டிச-201921:27:31 IST Report Abuse
rajprince அப்போ நாட்டில் எலக்ஷ்ன் கிடையாது ,வோட்டுக்கு யார் பணம் கொடுப்பா ?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-நவ-201922:06:09 IST Report Abuse
Anantharaman Srinivasan கிரிமினல்கள் தேர்தலில்நிற்க தடைவந்தால் நாட்டு அரசியல் ஒரு 20% சுத்தமாகும்..
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
26-நவ-201920:43:03 IST Report Abuse
தமிழ் மைந்தன் அடடே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X