கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டத்தை ரத்து செய்ய மனு

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
மேயர் பதவி,மறைமுக தேர்தல், அவசர சட்டம், ரத்து , மனு

மதுரை: மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும், தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனு: உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து, கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தல் நடத்த, தமிழக அரசு, நவ., 19ல் அவசர சட்டம் இயற்றியது.

கடந்த, 2006 தி.மு.க., ஆட்சியில் செய்த அதே தவறை, தற்போதைய தமிழக அரசு செய்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வரும் முன், மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தவில்லை. சட்டசபையில் விவாதித்து, ஒப்புதல் பெறவில்லை.வெற்றி பெறும் கவுன்சிலர்கள், மறைமுகத் தேர்தலின்போது குதிரை பேரத்தில் ஈடுபட, அவசர சட்டம் வழிவகுக்கும். இதனால், ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை செயல்படுத்த, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். சட்டம் செல்லாது என, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
26-நவ-201909:52:31 IST Report Abuse
GMM பொதுநல வழக்கு: அவசர சட்டம் எந்த விதிமுறைக்கு புறம்பானது? மக்களிடம் கருத்து கேட்க விதி முறைகள் உண்டா? சட்ட மீறல் விதி விவரம் கூறி தாக்கல் செய்யும் வழக்கு முறையானது. சீரானது. நீதிமன்றத்துக்கு தேவையானது. பேரம் நடக்கும் என்ற கருத்து செய்தி நிறுவனத்திற்கு சரி. சட்டத்தை ரத்து செய்த பின், சிறந்த சட்ட விதியை மனுதாரர் வகுத்து நீதிக்கு உதவ வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-நவ-201907:59:43 IST Report Abuse
ஆரூர் ரங் எங்க திராவிஷர்களுக்கும் ஹவாலா ஆட்களுக்கும் தேர்தலை சந்திப்பதே வேப்பங்காய் தீயமுக கைத்தடிகள் மூலம் கோர்ட்டுக்குப் போகாமல் என்ன செய்யும் ? .சட்டசபைத் தேர்தலில் சாதிபேதமின்றி மிகப்பெரும்பாலானோருக்கு பணவினியோகம் நடந்தது .ஆனால் உள்ளாட்சிகளின் வீச்சே வேறு 90%.முழுக்க முழுக்க சாதி இன அடிப்படையிலேயே வாக்களிக்க கட்டாயப்படுத்தப்படுவதால் பஞ்சாயத்துகளில் பணம் கேட்டுவாங்குவது கொஞ்சம் கடினம் .முக்கியமாக பாக் பரம்பரை அதிகமாக உள்ள பகுதிகளில் வேற்று இனத்தவர் போட்டியிட பிரச்சாரத்துக்கு கூட நுழைதலே கடினம் கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலோ சர்ச் பாதிரிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அவலமுமுண்டு. பல கிராமங்களில் ஊர் கூடி தலைவர் பதவியையே ஏலம் விடுகின்றனர் (ஊருக்குள் .கள்ளச்சாராயம் காய்ச்சும் உரிமையைகூட ஏலம்தான் விடுகின்றனர் )இவர்களா உள்ளாட்சி ஜனநாயகத்தை வளர்க்கப்போகிறார்கள் ?டுமீளன் அதிக விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன்? உள்ளாட்சி தேர்தல் அதிக கள்ளப்பணப்புழக்கத்துக்கு மட்டுமே உதவவும்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
26-நவ-201905:00:11 IST Report Abuse
blocked user ஊழல் செய்ய வழியில்லாமல் தவிக்கும் அதிமுக பணக்கார கவுன்சிலர்களை பிடித்து மொத்தமாக சலுகை விலைக்கு வாங்கிவிட முயன்றது. வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதிக தேர்தல் வந்தால்த்தான் பொதுமக்கள் பண மழையில் குளிப்பார்கள் என்று நினைக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X