மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டத்தை ரத்து செய்ய மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டத்தை ரத்து செய்ய மனு

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (3)
Share
மதுரை: மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும், தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை வழக்கறிஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனு: உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து, கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தல்
மேயர் பதவி,மறைமுக தேர்தல், அவசர சட்டம், ரத்து , மனு

மதுரை: மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும், தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனு: உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து, கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தல் நடத்த, தமிழக அரசு, நவ., 19ல் அவசர சட்டம் இயற்றியது.

கடந்த, 2006 தி.மு.க., ஆட்சியில் செய்த அதே தவறை, தற்போதைய தமிழக அரசு செய்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வரும் முன், மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தவில்லை. சட்டசபையில் விவாதித்து, ஒப்புதல் பெறவில்லை.வெற்றி பெறும் கவுன்சிலர்கள், மறைமுகத் தேர்தலின்போது குதிரை பேரத்தில் ஈடுபட, அவசர சட்டம் வழிவகுக்கும். இதனால், ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை செயல்படுத்த, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். சட்டம் செல்லாது என, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X