பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்

Added : நவ 26, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமைஇடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இன்று காலை, 11:00 மணியளவில் கள்ளக்குறிச்சியில் நடக்கிறது. முதல்வர், இ.பி.எஸ்., புதிய மாவட்டத்தை துவக்கி வைக்கிறார். பின், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.விழாவிற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் சண்முகம், உதயகுமார் முன்னிலை வகிக்கின்றனர். தலைமைச் செயலர் சண்முகம் வரவேற்கிறார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா நன்றி கூறுகிறார்.விழாவை ஒட்டி, கள்ளக்குறிச்சி விழாக் கோலம் பூண்டுள்ளது. கள்ளக்குறிச்சி விழா முடிந்த பின், மதியம், 1:30 மணியளவில் முதல்வர், இ.பி.எஸ்., விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லுாரி, டாக்டர், எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் விழுப்புரம் நகராட்சி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X