அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., வெற்றி தேசிய அரசியலை மாற்றும்: தேசிய தலைவர்கள் பேட்டி

Added : மே 16, 2011 | கருத்துகள் (15)
Share
Advertisement
தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை, நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, பரதன் போன்ற தேசிய தலைவர்கள் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், ராஷ்டிரிய லோக்தளம்
ஜெ., வெற்றி தேசிய அரசியலை மாற்றும்: தேசிய தலைவர்கள் பேட்டி

தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை, நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, பரதன் போன்ற தேசிய தலைவர்கள் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் அஜித் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழா முடிந்து கவர்னர் புறப்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, முன்வரிசையில் அமர்ந்திருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை சந்தித்து, நன்றி தெரிவித்தார். அவருக்கு, நரேந்திர மோடி சிவப்பு நிற குஜராத் சால்வை அணிவித்து வாழ்த்தினார். இருவரும் சில நிமிடங்கள் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் ஏ.பி.பரதன், டி.ராஜா, சந்திரபாபு நாயுடு, அஜித் சிங், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பச்சை வண்ண சால்வைகள் அணிவித்தனர். மோடியுடனும், விஜயகாந்துடனும் முதல்வர் ஜெயலலிதா பேசியதை, டிஜிட்டல் திரையில் காட்டினர். இதைப் பார்த்த தொண்டர்கள், கரவொலி எழுப்பி உற்சாகமடைந்தனர். ஜெயலலிதாவிடம், விஜயகாந்த் சில நிமிடங்கள் தொடர்ந்து பேசி, சில கருத்துக்களை தெரிவித்து, வாழ்த்து கூறினார். அதை முகம் நிறைய சிரிப்புடன் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.


விழா முடிந்த பின், நிருபர்களிடம் நரேந்திர மோடி கூறும் போது, "அ.தி.மு.க., வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது, ஊழலுக்கெதிரான வெற்றி. இந்த வெற்றி, இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். இனி தமிழகம் நிச்சயம் முன்னேறும் என உறுதியாகச் சொல்ல முடியும். இது, தமிழகத்திற்கு ஒரு புதிய வரலாறு. சில கட்சிகள் ஓட்டுகளை குறிவைப்பர்; சில கட்சிகள் நாட்டின் வளர்ச்சியை நோக்கி பயணிப்பர். இதில் ஜெயலலிதா, நாட்டின் வளர்ச்சியை எண்ணக் கூடியவர்' என்றார்.


தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, "ஜெயலலிதாவின் வெற்றி, ஊழலுக்கு எதிராக மக்கள் எடுத்த முடிவு. இது, தேசிய அரசியலிலும் மாற்றத்தை தரும்' என்றார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா கூறும்போது, "தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதன் மூலம் தமிழக மக்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் விரைவில் நிறைவேறும். இந்த வெற்றி, தேசிய அரசியலில் பிரதிபலிக்கும்' என்றார்.


விழா முடிந்த பின், சிறப்பு விருந்தினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், அ.தி.மு.க., புதிய அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொழிற்துறை பிரமுகர்களுக்கு, பிரபல நட்சத்திர ஓட்டலில் ஜெயலலிதா, மதிய விருந்தளித்தார். விழாவில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அதன் தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லாம் பாட்சா ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.


- நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinamalar Nirupar - Lemuriya,இந்தியா
17-மே-201104:29:32 IST Report Abuse
Dinamalar Nirupar :"இந்தியாவின் தலை சிறந்த V.V.I.P -களான மோடி, பரதன் , சந்திர பாபு நாய்டு வேறு எந்த முதல்வருக்காவது வந்ததுண்டா!! அம்மாவின் தனிச்சிறப்பே இதற்கு காரணம்"---------------------இனம் இனத்தோடு தானே சேரும். ஹிட்லர், முசோலினி. சதாம் ஹுசைன், பெண் கடாபி. .
Rate this:
Cancel
aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
17-மே-201103:53:43 IST Report Abuse
aravindh Raman ஆந்திராவில் பதவியை பரிதாபமாக பறி கொடுத்த ஒருவர்...குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான கொலை, வன்முறைகளை தடுக்க முடியாமல் கண்டு களித்த ஒருவர்...விமானம் ஏறி இங்க வந்தாங்களாம்...
Rate this:
Anand Ganesan - pudukkottai,இந்தியா
17-மே-201104:37:39 IST Report Abuse
Anand Ganesanதிரு. நரேந்திர மோடிய பற்றி முழுவதும் தெரியாமல் பேசாதீங்க......
Rate this:
Chandran - Tamil Nadu,இந்தியா
17-மே-201104:39:37 IST Report Abuse
Chandranஉண்மையான பெயரை சொல்லி இருக்கலாம் ..இதிலென்ன வெட்கம்.. சொல்லப்போனால் இது ஒரு கருத்து பின்னூட்டம்தான்.. கோத்ராவில் ஏன் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது என்பதையும் சேர்த்து கூறியிருந்தால் நீங்கள் யோக்கியர். நீ எதை விதைக்கிறாயோ அதை அறுவடை செய்வாய் என்பது எல்லா மதத்திலும் பொதுவாக கூறப்பட்ட ஒன்று......
Rate this:
Meenakshi Sundaram - Karaikudi,இந்தியா
17-மே-201106:44:00 IST Report Abuse
Meenakshi Sundaramசபாஷ் நல்ல பதில் வெரி குட் மீனாட்சிசுந்தரம் OOdivayal...
Rate this:
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
17-மே-201103:11:51 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN சிறந்த நிர்வாகியான, முதல்வர் தேசிய அரசியலுக்கும் பொருத்தமானவர் தான். அவரது திறமையை, நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X