பொது செய்தி

தமிழ்நாடு

'அய்யோ... அய்யய்யோ...!' கதறுகிறார் 'வைரல்' ஆன கழக அழகி

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (47)
Advertisement

கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சோனாலி பிரதீப், 38. மாடல் அழகி. 'திருமதி இந்தியா' பட்டம் வென்றவர். இவர்தான், கடந்த இரு நாட்களாக கோவை ஆளுங்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படும், 'விளாசப்படும்' நபர். இவரது கலர்புல் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி பலரை கிறங்கடித்துள்ளது.

இவருதாங்க சோனாலி பிரதீப். மாடல் அழகி. 'திருமதி இந்தியா' டைட்டில் வின்னர். இவரு, முதல்வரு, அமச்சர்ரோட இருக்குற போட்டோஸ், அதிமுகவுல மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுக்குற போட்டோஸ் எல்லா சோஷியல் மீடியாவுல வைரலாகிட்டு வருது. அதுலயும், இவருதான் கோயம்புத்தூர் மேயர் வேட்பாளருன்னு யாரோ கொளுத்திபோட்டது ஆளுங்கட்சிக்குள்ள நல்லாவே எரிய ஆரம்பிச்சது. பதறிபோன சோனாலி, என்னை பத்தி அவதூறு பரப்புறாங்கன்னு கோவை சாய்பாபா காலனி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காரு. இத விசாரிச்ச போலீஸ், ஈரோட்டை சேந்த திமுககாரர் ரகுபதிய அவதூறு பரப்பியதா அரஸ்ட் பண்ணியிருக்காங்க...


'தமிழக முதல்வர் பழனிசாமிக்கு 'பொக்கே' கொடுப்பது; உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு பொன்னாடை அணிவிப்பது; அ.தி.மு.க., அலுவலகத்தில் மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுப்பது' போன்ற படங்கள், ஆளுங்கட்சியினரையே 'ஜர்க்' ஆகச் செய்துவிட்டது. இவரே, மேயர் வேட்பாளரென, யாரோ சிலர் சமூக வலைதளங்களில் கொளுத்திப்போட்ட தீ, பற்றியெரிந்து ஆளுங்கட்சியினரை பதற வைத்துவிட்டது.
இது உண்மையா, என, பலரும் பத்திரிகையாளர்களுக்கு போன்போட்டு விசாரிக்க... பதிலளிக்க முடியாமல் திணறினர்.
'ஆளுங்கட்சிக்காக ரா பகலா உழைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் இன்னும் கவுன்சிலர் பதவிக்கே, கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க... மாடல் அழகி சோனாலிக்கு அப்படியென்னப்பா, பேக்கப். பின்னால யாரோ இருக்காங்க; இல்லாட்டி இப்படியெல்லாம் நடக்குமா?' என, கட்சிக்குள்ளேயே சிலர் கலகம் செய்யத்துவங்கிவிட்டனர்.
பற்றி எரிந்த நெருப்பால், பதறிப்போன சோனாலி, 'அய்யா...! என்னை பத்தி வேண்டாததெல்லாம் கிளப்புறாங்க...' என, போலீசில் புகாரளித்துவிட்டு புலம்பிக்கொண்டிருக்கிறார்.ஆமா, யாரப்பா அந்த சோனாலி, பின்னணிதான் என்ன, என்ற பலரது கேள்விக்கு விடையாக, இதோ அவரது 'பகிரங்க' பேட்டி:

கழகத்துக்குள்ளேயே 'கலகம்' செஞ்சிட்டீங்களே... நீங்க யாரும்மா?

பிறந்து வளர்ந்தது, கோயமுத்துாரில்தாங்க! இங்குதான் படித்தேன்; வளர்ந்தேன்...

அ.தி.மு.க.,வில் எப்போது இணைஞ்சீங்க?
தி.மு.க.,வுல இருந்து பிரிஞ்சு, எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பிச்சுதுல இருந்து, அ.தி.மு.க.,வுல என் அப்பா உறுப்பினர். முக்கியமான பொறுப்புலயும் இருந்துருக்கார். அந்த கட்சிமீதுள்ள பாசத்தாலதான் ரெண்டு வருஷமா 'கட்சி பணி' ஆற்றி வருகிறேன்.

உறுப்பினர் அட்டை இருக்கா?
அதெல்லாம் இருக்கு. கட்சியில அப்படி என்ன பணி செஞ்சிட்டீங்க...அதெல்லாம் இப்போ வெளியிட வேண்டாம்.... கொஞ்ச நாள் கழிச்சு நானே விளக்கமா சொல்றேன்.
உங்க அப்பா யாரு?
நேரம் வரும்போது சொல்றேன்; இப்போ வேண்டாம்.

உங்க பேமிலி...?
எனது கணவர் பிரதீப். சினிமா பீல்டுல இருக்காரு. ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.

மேயர் பதவி மேல அப்படி என்ன ஆசை?
எனக்கு மேயராகணும்ங்கற ஆசையெல்லாம் இல்லீங்க. இந்த ஊருல நான் பிரபலம்; அழகாகவும் இருக்கறதால, வதந்தி பரப்பிட்டாங்க. அதெல்லாம் புரளிங்க!

மேயர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுக்கலையா?

கட்சியில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாமே. அதுதானே ஜனநாயகம்; அதனால், கொடுத்தேன்.
உங்க பின்னால இருந்து யாரோ இயக்குறாங்களாமே...
யாரும் இயக்கல. என் சுய விருப்பத்தின் பேர்லதான் விருப்ப மனு கொடுத்தேன்.உங்க அப்பா யாருன்னு சொன்னா, மக்களுக்கு ஈஸியா அடையாளம் தெரியுமே...நேரம் வரும்போது, நானே சொல்றேன்.இப்படியொரு பேட்டி அவசியமான்னுதிட்றவங்களுக்கு ஒன்னே ஒன்னுதான், மக்களோட சந்தேகத்தை தீர்த்து வைப்பதுதானே பத்திரிகையாளனின் கடமை... ஹிஹிஹி!

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-நவ-201921:24:36 IST Report Abuse
சேரன் அதெல்லாம் சரி, அழகின்னா ஒங்க பாஷையில வேற அர்த்தமாச்சே?
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
26-நவ-201920:00:13 IST Report Abuse
Girija தன மனைவி அழகாக இல்லை என்னும் வெறுப்பில் புழுதி வாரி இறைக்கும் கூட்டம். இவர்கள் தலைவர் வழி நடப்பவர்களாம்?.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
26-நவ-201919:42:25 IST Report Abuse
J.Isaac என்ன இது கோயம்புத்தூருக்கு ( கவுண்டம்பாளையம்) வந்த சோதனை. எங்கோ சார்ட் சர்க்யுட் ஆகியிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X