வாய்பேசாத சிறுமிகள் பலாத்காரம்; கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு 40 வருட சிறை

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (151)
Share
Advertisement
மெண்டோஸ்: வாய்பேச முடியாத சிறுமிகளை பலாத்காரம் செய்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் 2 பேருக்கு 40 வருட சிறை விதித்து அர்ஜென்டினா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.மெண்டோஸ் நகரில் உள்ள ஒரு காப்பகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கி பயின்று வருகின்றனர். கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் இந்த காப்பகத்தில் கடந்த 2014ல் இங்குள்ள சிறுமிகள் பாதிரியார்களால் பலாத்காரம்

இந்த செய்தியை கேட்க

மெண்டோஸ்: வாய்பேச முடியாத சிறுமிகளை பலாத்காரம் செய்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் 2 பேருக்கு 40 வருட சிறை விதித்து அர்ஜென்டினா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.latest tamil newsமெண்டோஸ் நகரில் உள்ள ஒரு காப்பகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கி பயின்று வருகின்றனர். கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் இந்த காப்பகத்தில் கடந்த 2014ல் இங்குள்ள சிறுமிகள் பாதிரியார்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து பல எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரே விசாரணை சூடு பிடித்தது. இதில் குற்றசாட்டுகள் உறுதியானது குறித்து மெண்டோஸ் கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடந்தது.
விசாரித்த கோர்ட்டில் , பாதிரியார்கள் குரோஷியோ கார்பச்சோ (வயது 59) , நிக்கோலா கொர்ராடி (வயது 83) ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என நிரூபணமானது. இதில் கார்பச்சோவுக்கு 45 வருட சிறைத்தண்டனையும், கொர்ராடிக்கு 42 வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


latest tamil news
கண்ணீர் விட்ட பெற்றோர்கள்


இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் கோர்ட் அறையில் இருந்தனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி பாதிக்கப்பட்ட சோகத்தை அழுதபடி பகிர்ந்த காட்சி சோகத்தை வரவழைத்தது. மேலும் கருத்து எதுவும் சொல்ல மறுத்து விட்டனர். சிறைத்தண்டனை குறித்து கோர்ட்டுக்கு வெளியே ஒரு மாற்றுத்திறனாளி பெண் சைகை மூலம் வெற்றி பெற்றதாக மகிழ்ந்தார்.
" இது போன்ற விஷயங்கள் எவ்வளவு கொடுமையானது என்பது இந்த உலகிற்கு தெரிவதில்லை. வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தேவாலய நிர்வாகம் இந்த குற்றத்தை மறைக்க முயல்கிறது. சம்பந்தப்பட்டவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. " இவ்வாறு பாதித்த பெண்ணின் தந்தை ஒருவர் கூறினார்.

பாதிரியார் கொர்ராடி இத்தாலியை சேர்ந்தவர் ஆவார் .இவர் கடந்த 1970 ல் இங்குள்ள வெர்ரோனா நகரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இது போல் செக்ஸ் புகார் எழுந்தது. ஆனால் அந்த சம்பவத்தில் இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படவில்லை.


குற்றச்செயல்கள் அதிகரிப்பு


தற்போதைய போப் பிரான்சிஸ் பிறந்த நாடு அர்ஜென்டினா ஆகும். இங்கு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது வாடிகனுக்கு பெரும் அவப்பெயரை தந்துள்ளது. சமீபத்தில் கூட கேரள மாநிலத்தில் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். சமீபகாலமாக கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் காப்பகத்தில் இது போன்ற பலாத்காரம் உலக அளவில் பெருகி வருவதாக ஒரு புள்ளி விவரம் கவலை தெரிவிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
02-டிச-201909:08:26 IST Report Abuse
Indhuindian இந்த கொடு செயல் செய்யும் காமுகர்கள், பிணம் தின்னி கஷுகுகள் ஆண்டவனிடம் அங்கு செல்லும் ஏமாளிகளுக்கு பிரார்த்தனை செய்வார்களாம் அதை நம்பியும் ஒரு கூட்டம் கூட்டம் சேர்க்க காசு வாங்கும் ஒரு கூட்டம்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-டிச-201916:54:07 IST Report Abuse
Vijay D Ratnam ஒலகம் முழுக்க பாதிரி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடாத பாதிரியார் யாராச்சும் இருந்தால் நியூஸ் போடுங்கப்பா.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
01-டிச-201904:46:37 IST Report Abuse
oce இயேசு காப்பாற்றுவார் என்ற சொல்லி குருடர் செவிடர் ஊமைகள் மனநலமற்றவர்கள் என அந்த தரப்பினரை மட்டும் மதத்துக்குள் அணைத்து இழுப்பது இதற்காகவா. பாவாடைகள் கில்லாடிகள்.நல்லா கீறவனை மதம் மாற கூப்பிட்டா கல்லால் அடிக்கிறான். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X