கேரளாவில் பரபரப்பு: திருப்தி தேசாய் தடுக்கப்படுவாரா? | kerala,கேரளா, sabarimalai | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் பரபரப்பு: திருப்தி தேசாய் தடுக்கப்படுவாரா?

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (38)
Share
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றே தீருவேன் என அடம் பிடிக்கும் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வந்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தடுக்கப்படுவாரா அல்லது செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை செல்ல முற்பட்ட பிந்து மீது மிளகாய்பொடி வீசப்பட்டது.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற

இந்த செய்தியை கேட்க

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றே தீருவேன் என அடம் பிடிக்கும் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வந்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தடுக்கப்படுவாரா அல்லது செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை செல்ல முற்பட்ட பிந்து மீது மிளகாய்பொடி வீசப்பட்டது.latest tamil newsசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை, தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ஜன., 22-ம் தேதி மறு சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடக்கவுள்ளது. இதனால் எல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உத்தரவு அமலில் நீடிப்பதால் பெண்கள் வந்தால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஉச்சநீதிமன்ற வழக்கிற்கு முக்கிய காரணமானவரான பெண் உரிமை இயக்க பிரமுகர் திருப்தி தேசாய் இன்று ( நவ., 26ம் தேதி) சபரிமலை செல்லவுள்ளதாக கூறியுள்ளார். அவருடன் மேலும் சில பெண்களும் வந்துள்ளனர். கொச்சி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார்.


latest tamil news
தேசாய் எப்படிபட்டவர் ?


திருப்தி தேசாய் உடன் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றிய புஸ்பக் கிவாத்கர் என்ற பெண் கூறியதாவது:
எப்போது போராட்டம் நடத்தினாலும் தன்னுடன் குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்து கொள்வார். எட்டு அல்லது பத்து பேருக்கு மேல் அவருடன் இருக்க மாட்டார்கள். எனினும், அவரது போராட்டம் வீரியமாகவே இருக்கும். சர்வாதிகாரி போலவே செயல்படுவார். தன்னுடன் இணைந்து போராட்டம் நடத்தும் பெண்கள் பிரபலமடைவதை ஒரு போதும் அவர் விரும்ப மாட்டார். அவர் எதை செய்தாலும், பணத்திற்காகவும், பிரபலமடைவதற்காகவும் தான் செய்வார்.
ஒரு வியாபாரிக்கு பணம் தான் முக்கியம். அதுபோன்ற வியாபார நோக்கம் கொண்டவர் தான் அவர். ''நான் சபரிமலை வருவது உறுதி. தரிசனம் நடத்தாமல் திரும்பி செல்ல மாட்டேன்,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X