புதையல் சேகரிப்பு மியூசியத்தில் கோடிக்கணக்கில் திருட்டு

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
பெர்லின்: கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஐரோப்பாவின் பெரிய புதையல் சேகரிப்பு மியூசியத்தில் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் நகை பெட்டியுடன் சேர்த்து மூன்று வைர நகை பெட்டகங்கள் திருட்டு போய் உள்ளன.ஜெர்மனியின் சாக்சோனியின் ஆட்சியாளர், அகஸ்டஸ் தி ஸ்டிராங் என்பவர், 1723ம் ஆண்டு கிரீன் வால்ட் மியூசியத்தை நிறுவினர். உலகின் பழமையான மியூசிங்களில் ஒன்றான கிரீன்
GreenVault, Dresden, Robbery, Diamonds, Stolen, ஜெர்மன், கிரீன்வால்ட், டிரஸ்டென், திருட்டு, வைரங்கள்

பெர்லின்: கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஐரோப்பாவின் பெரிய புதையல் சேகரிப்பு மியூசியத்தில் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் நகை பெட்டியுடன் சேர்த்து மூன்று வைர நகை பெட்டகங்கள் திருட்டு போய் உள்ளன.

ஜெர்மனியின் சாக்சோனியின் ஆட்சியாளர், அகஸ்டஸ் தி ஸ்டிராங் என்பவர், 1723ம் ஆண்டு கிரீன் வால்ட் மியூசியத்தை நிறுவினர். உலகின் பழமையான மியூசிங்களில் ஒன்றான கிரீன் வால்ட்டில் மியூசியத்தில் மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைரம், தந்தம் மற்றும் முத்து ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட 3000 நகைகள் மற்றும் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள், ரஷ்யாவின் அரச பரிசான மரகதங்கள் பதிக்கப்பட்ட ஒரு மூரின் உருவம் மற்றும் 648 காரட் சபையர், 41 காரட் பச்சை வைரம், 16ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட இந்தியாவின் முத்து பெட்டி, ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil newsநேற்று (நவ.,25) அதிகாலை மியூசியத்தின் ஜன்னல் கம்பிகளை துண்டித்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்குள்ள 3 நகை பெட்டகங்களை திருடி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் 2 கொள்ளையர்கள் திருடி சென்றது கண்டறியப்பட்டது. கொள்ளையான பொருட்களின் விவரத்தை வெளியிடாத போலீசார், திருடப்பட்ட பொருட்களின் மதிப்புகளை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் அங்குள்ள பிரபல பத்திரிகையில் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 7,474.4 கோடி) மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-நவ-201915:22:06 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) , immigration துறையில் விசாரித்துப் பாருங்கள் யார் சமீபத்தில் பெர்லின் சென்றார்கள் என்று.
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
26-நவ-201913:56:37 IST Report Abuse
Asagh busagh நான் சென்ற வருடம் இந்த அருகாட்சியகத்தை பார்த்து வியந்தேன். விவரிக்க முடியாத அளவில் மிக உயர்ந்த விலை அறிய வைர வைடூரியங்கள் இருந்தது உண்மை. ஜெர்மனி காலனி ஆதிக்க நாடாக இருந்ததில்லை. ஆகையால் இவை பிரிட்டன் போல எளிய பிற நாடுகளிடம் இருந்து கொள்ளை அடிக்கபட்டவை அல்ல. அறிய வகை ஆபரணங்கள் கொள்ளை போனது வருத்தமாக உள்ளது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-நவ-201900:15:12 IST Report Abuse
தமிழவேல் சரித்திரம் தெரியாமல் தெரிந்தாற்போல் பேசக்கூடாது... ஆப்ரிக்காவில் "பலநாடுகள்", கினி, ஜப்பான் பக்கம், ஆஸ்திரேலியா தீவுகள் காலனியாக வைத்திருந்தது. அதோடு சீனாவில் கூட காலனி இருந்தது.. இதுவெல்லாம் உலகப்போரின்போது ஐரோப்பாவில் "அனைத்து நாடுகளிலும்" சுரண்டியது. அதோடு யூதர்களைக் கொரு, துன்புறுத்து உடைமைகள் "அனைத்தையும்" திருடிக்கொண்டது. அதில் உருக்கிய தங்கம் இன்னும் ஸ்விஸ் வங்கிகளில் உள்ளன. // ஜெர்மனி காலனி ஆதிக்க நாடாக இருந்ததில்லை. ஆகையால் இவை பிரிட்டன் போல எளிய பிற நாடுகளிடம் இருந்து கொள்ளை அடிக்கபட்டவை அல்ல. //...
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
26-நவ-201913:05:22 IST Report Abuse
Nathan ஈயார் தேட்டை தீயர் கொள்வர். (இங்கே ஈயார், உரியவருக்கு பொருளை திருப்பி தராதவர்.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X