பெர்லின்: கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஐரோப்பாவின் பெரிய புதையல் சேகரிப்பு மியூசியத்தில் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் நகை பெட்டியுடன் சேர்த்து மூன்று வைர நகை பெட்டகங்கள் திருட்டு போய் உள்ளன.
ஜெர்மனியின் சாக்சோனியின் ஆட்சியாளர், அகஸ்டஸ் தி ஸ்டிராங் என்பவர், 1723ம் ஆண்டு கிரீன் வால்ட் மியூசியத்தை நிறுவினர். உலகின் பழமையான மியூசிங்களில் ஒன்றான கிரீன் வால்ட்டில் மியூசியத்தில் மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைரம், தந்தம் மற்றும் முத்து ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட 3000 நகைகள் மற்றும் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள், ரஷ்யாவின் அரச பரிசான மரகதங்கள் பதிக்கப்பட்ட ஒரு மூரின் உருவம் மற்றும் 648 காரட் சபையர், 41 காரட் பச்சை வைரம், 16ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட இந்தியாவின் முத்து பெட்டி, ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (நவ.,25) அதிகாலை மியூசியத்தின் ஜன்னல் கம்பிகளை துண்டித்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்குள்ள 3 நகை பெட்டகங்களை திருடி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் 2 கொள்ளையர்கள் திருடி சென்றது கண்டறியப்பட்டது. கொள்ளையான பொருட்களின் விவரத்தை வெளியிடாத போலீசார், திருடப்பட்ட பொருட்களின் மதிப்புகளை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் அங்குள்ள பிரபல பத்திரிகையில் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 7,474.4 கோடி) மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE