பொது செய்தி

தமிழ்நாடு

பிரியாணி விலை ‛விர்ர்ர்': சாப்பாட்டு பிரியர்கள் கவலை

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: வெங்காயத்தின் விலை உயர்வால், ஓட்டல்களில் விற்கப்படும் பிரியாணி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பிரியாணி பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதோடு, தட்டுப்பாடும் நிலவுகிறது. மார்க்கெட்களில் வெங்காயம் வரத்து சரிவடைந்தது. வெங்காயம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருப்பதால், ஓட்டல்களில் உணவு
Biriyani, Onion, PriceHike, பிரியாணி, வெங்காயம், விலைஉயர்வு

இந்த செய்தியை கேட்க

சென்னை: வெங்காயத்தின் விலை உயர்வால், ஓட்டல்களில் விற்கப்படும் பிரியாணி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பிரியாணி பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதோடு, தட்டுப்பாடும் நிலவுகிறது. மார்க்கெட்களில் வெங்காயம் வரத்து சரிவடைந்தது. வெங்காயம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருப்பதால், ஓட்டல்களில் உணவு சமைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, ஆம்லேட், பிரியாணி தயாரிப்பில் வெங்காயம் முக்கியம் என்பதால், பிரியாணி கடைக்காரர்கள் தவித்து வருகின்றனர். சில ஓட்டல்களில் ஆம்லேட்டுகளில் வெங்காயம் 'கட்' ஆகிறது, மேலும் பிரியாணியின் விலை உயர்ந்துள்ளது.


latest tamil news


சென்னையில் நடுத்தர ஓட்டல்களில் சிக்கன் பிரியாணியின் விலை ரூ. 200க்கும், மட்டன் பிரியாணி ரூ.250க்கும் விற்கப்படுகிறது. சிறிய மற்றும் சாலையோர ஓட்டல்களில் ரூ. 130 முதல் 180 வரையில் விற்கப்படுகிறது. இது முன்பு விற்கப்பட்டதை விட 30 முதல் 50 ரூபாய் வரை அதிகம்.
அதே போல் நட்சத்திர ஓட்டல்களிலும் 50 முதல் 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. வெங்காய விலை உயர்வு பிரியாணி விலையை மட்டுமல்ல பிரியாணி பிரியர்களின் ஏக்கத்தையும் கவலையையும் அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
26-நவ-201922:05:44 IST Report Abuse
S.BASKARAN வெங்காயத்தின் விலை குறைத்தபோது இவர்கள் விலையை குறைக்கிறார்களா? இது கொஞ்சம் நாட்கள்தான்.இவர்கள் விலை ஏற்றத்தில் ஜஸ்டிபைஸாட்டின் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
26-நவ-201921:20:07 IST Report Abuse
வருண் என்னது நூறு ரூவா வர ஏத்திருக்கானுகளா? கிலோ வெங்காயம் எழுவது ரூவா. அப்ப ஓரு பிரியாணில ஒன்ற கிலோ வெங்காயமா போட்றானுக? கேக்க நாதி இல்லன்னா எண்ணவேனா பண்ணுவாய்ங்கெ போல.?
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-நவ-201919:12:12 IST Report Abuse
தாண்டவக்கோன் எவ்ளோவேனாலும் ஏத்துங்க, it won't affect me wee bit 👍👍👍 'coz நா Pure vegetarian னாக்கும் 👏😀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X