முதல்வர் பதவியிலிருந்து விலகினார் பட்னவிஸ்

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (157)
Advertisement
மஹாராஷ்டிரா, முதல்வர், பட்னவிஸ், பாஜ, பா.ஜ., ராஜினாமா

மும்பை: தங்களிடம் போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், மஹாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக பட்னவிஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அமைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. திடீர் திருப்பமாக, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன், 23ல், பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வராக, பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இதை எதிர்த்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதனை விசாரித்த நீதிமன்றம், நாளை (நவ.,27) சட்டசபையை கூட்டவும், மாலைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: பாஜ-சிவசேனா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். 105 எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்தனர். தனிப்பெரும் கட்சியான பா.ஜ.,வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை உள்ளது. சிவசேனாவை விட பா.ஜ., கூடுதல் தொகுதிகளை பெற்றது. முதல்வர் பதவி வழங்குவோம் என சிவசேனாவுக்கு எப்போதும் வாக்கு அளிக்கவில்லை. ஆனால், சிவசேனா பேரம் பேசும் வியூகத்தை கையாண்டது. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா மிரட்டல் விடுத்தது.


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த சில மணி நேரத்தில் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். அடுத்த சில நிமிடங்களில் பட்னவிசும் பதவி விலகினார். மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டதால் ராஜினாமா செய்தேன் என்று, அவர் கூறினார்.




தேர்தல் முடிவு வெளியாகி, பா.ஜ.,வுக்கு சீட்கள் குறைந்த உடனே சிவசேனா மற்ற கட்சிகளுடன் பேச ஆரம்பித்து விட்டது. பொய் சொல்லி, பா.ஜ.,வை காத்திருக்க வைத்தது. ஆதரவு கேட்டு மற்ற கட்சிகளிடம் கெஞ்ச துவங்கியது. பால் தாக்கரே குடும்பத்தினர் மற்ற கட்சிகளிடம் கெஞ்சினர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைகுழு தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்த காரணத்தினால் தான் பதவி ஏற்றோம். எங்களிடம் போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லை. ஆதரவை தொடர முடியாது என அஜித் பவார் கூறிவிட்டதால்,பதவி விலகுகிறேன்.ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அளிக்க உள்ளேன்.






சட்டசபையில் பா.ஜ., எதிர்க்கட்சியாக செயல்படும் கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டோம். அடுத்து அமையும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆட்சி நிலையான ஆட்சி அமையாக இருக்காது.புது அரசு, நெருக்கடியின் கீழ் தான் செயல்படும். அதிகாரத்திற்காக அலையும் சிவசேனா, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கவர்னரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை பட்னவிஸ் கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, துணை முதல்வர் அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
27-நவ-201904:34:58 IST Report Abuse
Rajavel அவன் அரசியல் சாணக்கியன் அல்ல அவன் ஒரு அரசியல் காமெடியன்
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
27-நவ-201904:34:20 IST Report Abuse
Rajavel அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்
Rate this:
Share this comment
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
27-நவ-201900:26:46 IST Report Abuse
Naam thamilar அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பவாரின் முன் அமித்ஷா ஒரு கத்து குட்டியே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X