மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு

Updated : நவ 26, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (62)
Advertisement
Maharashtra, CM, UddhavThakre, ShivSena, Congress, NCP, மஹாராஷ்டிரா, முதல்வர், உத்தவ்தாக்கரே, சிவசேனா

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். மும்பையில் நடந்த, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் கூட்டத்தில், கூட்டணி தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி முன்னிலையில், கடந்த நவ., 23ம் தேதி பாஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்.,சின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். பெரும்பான்மை இல்லாமல் பதவியேற்பு நடந்ததாக சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் பட்னவிசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.






திடீர் திருப்பமாக போதிய பெரும்பான்மை இல்லாததால் துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். பின், பட்னவிசும் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கோஷ்யாரிடம் வழங்கினார்.

மும்பையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கூட்டணி தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். உத்தவ் தாக்கரே வரும் டிச.,1 ம் தேதி, சிவாஜி பூங்காவில் நடக்கும் எனக்கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201920:07:47 IST Report Abuse
Janarthanan காவி ஆடையும் நெற்றில் பொட்டவுடன் திரிந்த உத்வ இப்பொழுது வெள்ளை ஆடை உடுத்தி திரிய ஆரம்பித்து விட்டாராமாம்??? உன்னும் சிலுவை தான் போட வில்லை???
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
27-நவ-201905:36:35 IST Report Abuse
Rayஇதைத்தான் "பேத்தல்" என்று காவிகளே சொல்வார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-நவ-201919:57:13 IST Report Abuse
Natarajan Ramanathan சிவசேனை, NCP, கான்கிராஸ் மூவரும் சேர்ந்து ஒரு நல்ல மாநிலத்தை நாசம் செய்யப் போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
26-நவ-201919:43:01 IST Report Abuse
நக்கல் தேசதுரோகிகளை வளர்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் இப்பொழுது எட்டப்பன்களை வளர்க்க ஆரமித்து விட்டது... தங்களால் இனி எந்த ஆட்சியையும் பிடிக்கமுடியாது என்கிற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது... இந்த காங்கிரெஸ்ஸுக்கும் தேசநலனுக்கும் என்றுமே சம்மந்தம் இல்லை... சோனியா குடும்பம் அரசியலையும், இந்த நாட்டையும் விட்டு ஓடும் நாள் வெகுதொலைவில் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X