கடமையை செய்ய நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு

Updated : நவ 28, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி ''அரசியல் சாசனம் அமலுக்கு வந்ததன், 70வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், ஒரு காலத்தில் உரிமையை வலியுறுத்தியதுபோல், தற்போது மக்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அரசியல் சாசனத்தின், 70வது ஆண்டையொட்டி, பார்லியின் கூட்டுக் கூட்டம் நேற்று நடந்தது. மஹாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
PM,Modi,மோடி, கடமை, செய்ய , மக்களுக்கு. அழைப்பு

புதுடில்லி ''அரசியல் சாசனம் அமலுக்கு வந்ததன், 70வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், ஒரு காலத்தில் உரிமையை வலியுறுத்தியதுபோல், தற்போது மக்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அரசியல் சாசனத்தின், 70வது ஆண்டையொட்டி, பார்லியின் கூட்டுக் கூட்டம் நேற்று நடந்தது. மஹாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.

கூட்டுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நம் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமே, அது குடிமக்களுக்கான உரிமையை வலியுறுத்தும் அதே நேரத்தில், அவர்களுடைய கடமையையும் சுட்டிக் காட்டுகிறது. நம் நம்முடைய கடமையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக, நீதி மற்றும் சமத்துவம் மறுக்கப்பட்டு வந்ததாக உரிமைக்காக மக்கள் போராடினர். தங்களுடைய கடமை மற்றும் பொறுப்பு குறித்து மக்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொறுப்புகளை, கடமைகளை நிறைவேற்றாமல், நம்முடைய உரிமையை நாம் பெற முடியாது.


ஒற்றுமைநமது அரசியல் சாசனம், 'இந்திய குடிமக்களாகிய நாம்...' என்று தான் துவங்குகிறது. மக்களே, அரசியல் சாசனத்தின் வலிமை, இலக்கு மற்றும் துாண்டுகோல்.நம்முடைய ஒவ்வொரு செயலிலும், நம்முடைய கடமையை சரியாக நிறைவேற்றுகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். மஹாத்மா காந்தி கூறியதுபோல், நாட்டின் குடிமக்களாகிய நாம் நம்முடைய செயல்களால், நாட்டை எப்படி வலுப்படுத்துகிறோம் என்பதே மிகவும் முக்கியம்.

அனைத்து இந்தியர்களுக்கும் கவுரவம் மற்றும் நாட்டின் ஒற்றுமை ஆகிய இரண்டு தான், அரசியல் சாசனத்தின் முக்கிய நோக்கம். அரசியல் சாசனம் என்பது நமது புனித நுாலாகும். அதில், நமது பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகள் குறித்தும், ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வும் இடம்பெற்றுள்ளது.

இந்த அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர், 'நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் முழுமையாக கட்டி காக்கப்பட வேண்டும்' என, மக்களை வலியுறுத்தினார். தற்போது அவர் உயிரோடு இருந்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவார்.


அஞ்சலி


இந்திய மக்கள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதுடன், அதை மேலும் வலுவானதாக மாற்றி வருகின்றனர்.இந்த நல்ல நாளில், அரசியல் சாசனம் உருவாக காரணமாக இருந்த ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல், பண்டிட் நேரு, ஆச்சாரியா கிருபளானி, மவுலானா அப்துல் கலாம் ஆசாத் ஆகியோரை நாம் நினைவு கூற வேண்டும். ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியுடன் நாம் இந்த தினத்தை கொண்டாடும் நேரத்தில், மும்பையில், 11 ஆண்டு களுக்கு முன், இதே நாளில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.


கடமையே உரிமை


அரசியல் சாசனத்தின், 70வது ஆண்டையொட்டி பார்லியில் நடந்த கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் பேசினர். அவர்கள் பேசியதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெறிகளின்படி செயல்பட வேண்டியது அனைவரின் கடமை. மஹாத்மா காந்தி கூறியதுபோல், நம் கடமையை செய்வதே நம்முடைய உரிமை. நம்முடைய கடமையை நாம் சரியாக செய்தால், உரிமை நம்மைத் தேடி வரும். அவ்வாறு செய்யாதவர்களே, உரிமையைத் தேடி அலைகின்றனர். அரசியல் சாசனமே, நமது ஜனநாயகத்தின் அடிப்படையாகும். அதனால்தான், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நாம் விளங்குகிறோம்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: சொந்த நலன், பேராசை ஆகியவற்றை விட்டு விட்டு, நாட்டின் நலனுக்காக, நம்முடைய கடமையை ஒவ்வொரு இந்தியரும் செய்ய வேண்டும். அரசியல் சாசனம் குறித்து அம்பேத்கர் கூறுகையில், 'நாட்டு நலனைவிட, மக்கள் தங்களுடைய பேராசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், நாட்டின் சுதந்திரம் கேள்விக்குறியாகிவிடும். ஆனால், அதன்பின் நாட்டை காப்பாற்றவே முடியாது' என்றார். இதை, நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா: தங்களுடைய உரிமையைக் கேட்கும் ஒவ்வொருவரும், தங்களுடைய கடமையையும் அறிய வேண்டும்; இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், ஒவ்வொரு, எம்.பி.,யும் மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.


போராட்டம் நடத்திய எதிர்கட்சி தலைவர்கள்


மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி அமைத்த விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், சிவசேனா, திருணமுல் காங்., தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள், பார்லி., வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக போராட்டம் நடத்தின. காலை, 10 மணிக்கே, 12 எதிர்க்கட்சிகள் கூடிய போதிலும், 10:45 மணிக்குத்தான் காங்கிரஸ் எம்.பி.,க்கள் வந்தனர். அதன் பின்பே, ஆர்ப்பாட்டம் துவங்கியது.

எம்.பி.,க்கள் கோஷம் போடாமல், சிலையைச் சுற்றி நிற்க, தலைவர்கள் முன்பகுதியில் நின்றனர். பார்லிமென்ட்டில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் உரை முடியும் வரை, இங்கேயே இருப்பது என, அவர்கள் முடிவெடுத்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட சில மூத்த எம்.பி.,க்கள், நீண்டநேரம் வெயிலில் நிற்க முடியாமல், சிலையின் பின்புற நிழலில் அமர்ந்தார்கள். 'ஜனநாயகத்தை படுகொலை செய்யாதீர்கள்' என்ற வாசகம் அடங்கிய பேனருடன், சோனியா, ராகுல், டி.ஆர்.பாலு, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் நின்றபடி, அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தின், முன்பக்கத்து வாசகங்களை வாசித்து, உறுதி மேற்கொண்டனர்.


உதயாவுக்காக பார்லி.,க்கு, 'மட்டம்'


ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்ட தி.மு.க., எம்.பி.,க்கள் பலர், மதியத்துக்கு மேல், பார்லிமென்ட்டிற்கு வராமல், விமானநிலையத்திற்கு பறந்தனர். விசாரித்தபோது, தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதியின் பிறந்தநாளுக்காக, அவருக்கு நேரில் வாழ்த்துச் சொல்ல கிளம்பியது தெரிய வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
27-நவ-201917:13:21 IST Report Abuse
Rajas சொந்த நலன், பேராசை விட்டு விட்டு கடமையை செய்ய வேண்டுமா. இரண்டு வேளை ஏதோ கிடைத்ததை சாப்பிடுவது சொந்த நலன், சொல்லியபடி ஏதாவது வேலை கொடுப்பார்கள் என்று நினைத்தால் அது பேராசையா. கீதையின் படி (கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே) ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும் போதே சந்தேகம் வந்தது.
Rate this:
Cancel
AM FAROOK - chennai,இந்தியா
27-நவ-201913:10:59 IST Report Abuse
AM FAROOK இந்தியா மக்கள் எல்லோரும் சட்டதை மதித்து செயல் படுகின்றனர் அரசியல் தலைவர்கள் சட்டதை மீறி செயல் படுவது மற்றும் நீதி துறை தலையிட்டு வருவதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் சமீபமாக மகாராஷ்டிரம் நடந்த நிகழ்ச்சி அரசியல் சாசனம் மீறப்பட்டு இருப்பதை வேதனை அளிக்கிறது மக்கள் ஒற்றுமையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு அரசுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் நாம் இந்தியர் நம் மக்கள் என்ற உணர்வுடன் தனி மனிதன் சுதந்திரம் பாதுகாப்பு மருத்துவ காப்பீடு வேலைவாய்ப்பு விலைவாசி கட்டுக்குள் வைத்து ஓவ்வரு குடும்ப அட்டை தாரர்களுக்கு செய்து கொடுத்து வளமுடன் நாட்டை முன்னெற்ற பாதையில் அரசு வழி வகை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
27-நவ-201912:05:29 IST Report Abuse
Ashanmugam உரிமைகள் கடமைகள் கொண்ட அரசியல் அமைப்பு சாஸனம் குறித்து பாரத பிரதமர் மோடிஜி பெருமிதம் கொள்கிறார். ஆனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற மந்திரிமார்களுக்கு எப்படி கோடான கோடி சொத்து பணம் வந்தது எப்படி என்று மோடிஜி அவர்கள் கூற முடியும்மா? ஆக நமது அரசியல் அமைப்பு சாஸனம் உரிமைகள் கடமைகள் பொறுப்புடன் செயலாற்றுவதற்கு பதிலாக எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டின் சொத்தை அதிகார தோரணையில் கொள்ளை அடிக்க முடியும்மோ, அவ்வளவுக்கு கொள்ளை அடிக்க இந்திய அரசியல் சாசனம் அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் லாவண்யம், கமிஷன் மூலம் வளைந்து கொடுக்கிறது. எனவே இந்தியாவில் காந்தி, ராஜேந்திர பிரசாத், பட்டேல், ஆசாத் மவுலானா போன்ற தன்னலமில்லா தலைவர் இந்தியாவில் பிறப்பார்கள் ஆயிரத்தில் ஒரு நாளே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X