அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவித்தார் முதல்வர்

Updated : நவ 27, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: தமிழகத்தின், 34வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி நேற்று உதயமானது. துவக்க விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., பேசுகையில், ''நடப்பாண்டும், பொங்கல் பரிசாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, அறிவித்தார்.'விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்' என, முதல்வர்,
மாவட்டம், இ.பி.எஸ்., கள்ளக்குறிச்சி, பொங்கல் பரிசு

கள்ளக்குறிச்சி: தமிழகத்தின், 34வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி நேற்று உதயமானது. துவக்க விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., பேசுகையில், ''நடப்பாண்டும், பொங்கல் பரிசாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, அறிவித்தார்.

'விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., ஜன., 8ல் சட்ட சபையில் அறிவித்தார். மாவட்ட எல்லைகளை வரையறை செய்து, நவ., 13ல் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்ட துவக்க விழா, கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது.

முதல்வர், இ.பி.எஸ்., புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து, 24.77 கோடி ரூபாயில், 52 பணிகளை துவக்கி வைத்து, 194.81கோடி ரூபாயில், 466 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 5,873 பயனாளிகளுக்கு, 23.58 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில், முதல்வர் பேசியதாவது:மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களைப் பிரிப்பது என்பது, வரைபடத்தில் கோடுகள் போடுவது அல்ல; நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் மக்களை நெருங்கிச் சென்று, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது ஆகும். இதுவரை, ஐந்து புதிய மாவட்டங்களை, ஒரே ஆண்டில் துவக்கிய வரலாறு இல்லை. 1993ல் தென்னாற்காடு மாவட்டத்தை பிரித்து, முன்னாள் முதல்வர், ஜெ., விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்கினார்.

தற்போது, விழுப்புரத்தில் இருந்து பிரித்து, 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் அருகே, 1,866 ஏக்கர் பரப்பளவில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லுாரி துவக்கப்படும்.


யார், யாருக்கு?தைப்பொங்கல் பண்டிகை, தமிழர்களின் தனிச் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். பொங்கல் பண்டிகை, தமிழக மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் மரபு மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் இவ்விழா, அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.சென்ற ஆண்டு, வறட்சியின் பாதிப்பு, ஏழை மக்களை பாதிக்காத வகையில், அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கு, பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினோம்.

இவ்வாண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள், தாங்கள் வைத்திருந்த பணத்தை இடு பொருட்களுக்கும், பல்வேறு பணிகளுக்கும் செலவழித்து விட்டனர். இதனால், போதிய வருமானமின்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அவர்கள், இவ்வாண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, கடந்த ஆண்டை போல், அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, தலா, 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருள் தொகுப்பு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டதால், இங்குள்ள மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. தாய், தன் மகளை புகுந்த வீட்டிற்கு சீர் கொடுத்து அனுப்புவதை போல், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு, ஆறு தாலுகாக்களை சீதனமாக கொடுத்துள்ளது,'' என்றார்.

சட்டத் துறை அமைச்சர் சண்முகம், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, விழுப்புரத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு சட்டக் கல்லுாரி கட்டடம், 7.97 கோடி ரூபாய் மதிப்பிலான டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கட்டடங்களை, முதல்வர், இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.


5 சட்டசபை தொகுதிகள்கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய, ஐந்து சட்டசபை தொகுதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைகின்றன.கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் வருவாய் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார் பேட்டை, சங்கராபுரம், சின்ன சேலம், கல்வராயன்மலை ஆகிய ஆறு தாலுகாக்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைகின்றன. கலெக்டராக கிரண்குராலா, எஸ்.பி.,யாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mariyappangopinathan - Chennai,இந்தியா
27-நவ-201915:15:02 IST Report Abuse
mariyappangopinathan மக்களுக்கு நம்ம கட்சி பணம் கொடுத்தால் அது ஓட்டுக்கு கொடுக்கிறதா தேர்தல் கமிஷன்ல எதிர் கட்சிகள் சொல்வாங்க. அதனால அ தி மு க தொண்டர்களே இந்த சந்தர்ப்பத்தை நல்லா பயன்படுத்தி அரசாங்க பணத்தை கொடுத்து வோட்டுக்கு நாம கொடுக்காத மாதிரி நடிக்கிறேன். நீங்க உங்க கொள்ளை அடிச்ச பணத்தை செலவு செய்யாம காப்பாத்திக்க வழியும் செய்திருக்கேன். எப்படி என்னுடைய ஐடியா.
Rate this:
Cancel
27-நவ-201911:48:19 IST Report Abuse
பச்சையப்பன் இன்றைக்கு இருக்கும் செலவுகளுக்கு 1000 ரூபாய் எந்த மூலைக்கு?. உடணடியாக 3000 ரூபாய் கொடுங்கள். உங்களால் முடியாது என்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு முதல்வர் பதவியை எங்கள் தளபதியிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர் MP தேர்தலில் மாதம் 6000 தருவதாக வாக்குறுதி குடுத்தார். இன்னும் நகை கடன் தள்ளுபடி வாக்குருதி நிறைவேற வேண்டாமா??. உடணடியாக ஆரிய அடிமைகளே பதவி விலகுங்கள்.
Rate this:
Cancel
27-நவ-201909:55:55 IST Report Abuse
நக்கல் இதில் முக்காவாசி பணம் டாஸ்மாக் வழியா திரும்ப வந்துவிடும்... கழகங்களை திருத்த முடியாது... அவர்கள் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X