சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகளால் ஆபத்து போலீசில் நடிகை காயத்ரி புகார்

Added : நவ 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 விடுதலை சிறுத்தைகளால் ஆபத்து போலீசில் நடிகை காயத்ரி புகார்

சென்னை:விடுதலை சிறுத்தை கள் கட்சியினரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது' என, நடிகை காயத்ரி ரகுராம், போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் விதமாக, புதுச்சேரியில் நடந்த மகளிர் மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.அப்போது, 'குவி மாடமாக இருந்தால், மசூதி; கூம்பு போல இருந்தால், அது தேவாலயம்; அசிங்கமான பொம்மைகள் இருந்தால், அது கோவில்' என, கூறியிருந்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.மதக் கலவரத்தை துாண்ட முயற்சித்து வருவதாக, திருமா மீது, ஹிந்து அமைப்பினர், போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், திருமாவளவன், ஹிந்துக்களை அவமதித்து வருவதாக, நடிகை காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். மேலும், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஹிந்துக்கள் அனைவரும், திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்' என, காட்டமாக கூறியிருந்தார். இதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள, காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனினும், காயத்ரி ரகுராம், 'இந்த பிரச்னையை, நான் இத்துடன் விடுவதாக இல்லை. ஹிந்துக்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து வரும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர், எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.'வி.சி., கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்' என, 'டுவிட்டரில்'பதிவிட்டு இருந்தார்.

அதற்கு திருமாவளவன், 'அவுத்துப் போட்டு நடிப்பவர்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? தற்குறிகளுக்கு, நான் கூறிய கருத்தை புரிந்து கொள்ள சக்தி கிடையாது' என, பதில் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:வி.சி., கட்சியினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள், என் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர்; ஆபாசமான வார்த்தைகளில் திட்டுகின்றனர்.அவர்களால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கும், என் குடும்பத்தாருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
27-நவ-201914:44:31 IST Report Abuse
amuthan எல்லாத்தையும் பொத்தி வைக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X