அயோத்தி வழக்கில் மறு சீராய்வு இல்லை: சன்னி வக்ப் வாரியம் திடீர் அறிவிப்பு

Added : நவ 27, 2019
Advertisement
லக்னோ:'அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை' என, சன்னி வக்ப் வாரியம் அறிவித்துஉள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங் களில் நடந்து வந்தது. சமீபத்தில், இந்த வழக்கில் உச்ச
 அயோத்தி வழக்கில் மறு சீராய்வு இல்லை: சன்னி வக்ப் வாரியம் திடீர் அறிவிப்பு

லக்னோ:'அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை' என, சன்னி வக்ப் வாரியம் அறிவித்துஉள்ளது.



உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங் களில் நடந்து வந்தது. சமீபத்தில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 'சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, உ.பி., அரசு, வேறு ஒரு பகுதியில், 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒரு தரப்பான, மத்திய சன்னி வக்ப் வாரியத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, மாறுபட்ட கருத்து நிலவியது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்தின் ஆலோசனை கூட்டம், உ.பி., மாநிலம், லக்னோவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், அதன் தலைவர் ஜுபார் பரூக்கி கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்ற முடிவில், உறுதியாக உள்ளோம். வழக்கறிஞர் அப்துல் ரசாக் மட்டும், இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். மற்ற உறுப்பினர்கள் அனைவருமே, சீராய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்ற முடிவில், உறுதியாக உள்ளனர். மேலும், மசூதி கட்டுவ தற்காக, வேறு ஒரு பகுதி யில், அரசு தரும், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து, மேலும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
வரவேற்பு
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என்ற, வக்ப் வாரியத்தின் முடிவை, பா.ஜ., வரவேற்கிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு, நாட்டின் நலன் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை கருதி, நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. -ஷாநவாஸ் உசேன், செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X