பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
ராமேஸ்வரம்: கார்த்திகை, மார்கழியில் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்த சீசனில் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட்டை சுற்றிலும் அரசு புறம்போக்கு, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கம்பளி துணிகள், பூஜை பொருள் விற்பனை கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இக்கடைகள் பக்தர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ராமேஸ்வரம்: கார்த்திகை, மார்கழியில் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்த சீசனில் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட்டை சுற்றிலும் அரசு புறம்போக்கு, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கம்பளி துணிகள், பூஜை பொருள் விற்பனை கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.

இக்கடைகள் பக்தர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இக்கடைகளுக்கு தலா 5000 ரூபாய் குத்தகை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் 3.47 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்டது. இந்நிலையில், சில காரணங்களுக்காக, அரசு புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி முடிவு செய்தது. அதன்படி நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார், இன்ஸ்பெக்டர் சந்தனமாரி, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X