விளக்கு எரிவதில்லை

Added : நவ 27, 2019
Advertisement

திருப்பூர்-பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் சிக்னல் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. எரியாத மின்விளக்கை மாற்றி புதிய விளக்கு பொருத்த வேண்டும்.-டி.ராஜசேகர், தென்னம்பாளையம்.வேகத்தடை அமைக்கலாமே!திருப்பூர்-காமராஜர் ரோட்டில் உள்ள உயர்மட்ட பாலம் - அரிசிக்கடை வீதி சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டில் செல்ல வாகனங்கள் ஒன்றோடுஒன்று முந்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.-ஏ.விஜய்குமார், திருப்பூர்.குழியை மூட வேண்டும்திருப்பூர், 36வது வார்டு, முத்தணம்பாளையம், பைவ் ஸ்டார் நகரில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.-ஏ.ராஜா, முத்தணம்பாளையம்.குப்பை அள்ளுங்க...திருப்பூர், 34வது வார்டு, வி.ஜி.வி., கார்டன் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.-டி.அமுதா, வி.ஜி.வி., கார்டன்.கழிவுகளால் துர்நாற்றம்பொங்கலுார், மாதப்பூர் பிரிவு மெயின் ரோட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு செப்டிக் டேங்க் கழிவுகள் ரோட்டில் திறந்து விடப்படுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.-சி.ராமசாமி, மாதப்பூர்.மாநகராட்சி கவனத்துக்கு...1. திருப்பூர், காலேஜ் ரோடு, சூசையாபுரத்தில் ரோட்டோரத்தில் குப்பை கொட்டப்படுகிறது. திறந்த வெளியில் பலரும் அசுத்தம் செய்வதால், சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது.-வி.ஜனார்த்தனன், சூசையாபுரம்.2. திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோடு, தொட்டிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே பலரும் கழிப்பிடமாக பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.-கே.ரவிக்குமார், தொட்டிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X