புதுடில்லி: பார்லி. கூட்டத்தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியது,

நாட்டின் பொருளாதார நிலை மந்தநிலையில் இல்லை. வளர்ச்சி விகிதம் குறைந்தாலும், மந்தமான சூழ்நிலையில் இல்லை. பொருளாதாரம் எப்போதும் மந்தநிலைக்கு வராது. கடந்த 2009-2014-ம் நிதியாண்டின் இறுதியில் ஜி.டிபி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தி,6.4 சதவீதமாக இருந்தது. 2014-19 நிதியாண்டில் 7.5 சதவீதமாக உள்ளது என்றார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நிர்மலா கண்டனம்
அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கொண்டிருந்த போது எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இதனை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ஒரு விவாதத்தை கோருவதும், அதற்கு அரசு பதில் அளிக்கும்போது வெளிநடப்பு செய்வதும் 2014 முதல் எதிர்க்கட்சியின் பழக்கமாகும். பதில்களை நான் தயாராக இருக்கும்போது, அவர்கள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நான் தொடர்ந்தால், அவர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என கூறினார்.