ஊட்டி:நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே வனப்பகுதியில் குட்டியானை இறந்தது. அதனருகே தாய்யானை மிரட்சியுடன் நிற்பதால், வனத்துறையினரால் குட்டியானை உடலை உடனே மீட்க முடியவில்லை. தற்போது மேலும் 7 யானைகள் சம்பவ இடம் அருகே நிற்கின்றன. இந்நிலையில் குட்டியானை உடலை கயிறுகட்டி இழுக்க வனத்துறையினர் முயன்றபோது, அவர்களை யானைகள் விரட்டியது. அப்பகுதியில் இருந்த 8 பைக்குகள், வனத்துறை வாகனம் இரண்டும் யானைகள் தாக்கியதில் சேதமாகின. மேலும் அங்கு இருந்த கோயிலும் இடிந்தது.
Advertisement