சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 27, 2019
Advertisement

அறிவியல் ஆயிரம்

உருகும் பனிப்பாறைகள்


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகள், 1800ல் இருந்து தற்போது வரை எவ்வாறு உருகியுள்ளன என்பதை புகைப்படம் மூலம் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே 500 பனிப்பாறைகள் உருகி விட்டன. மேலும் 1,350 பனிப்பாறைகள் 2100ம் ஆண்டுக்குள் உருகி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பனிப்பாறைகளை பாதுகாக்க வலியுறுத்தி, ஒரு லட்சம் பேர் கையெழுத்து இயக்கம் நடத்தி சுவிட்சர்லாந்து அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

தகவல் சுரங்கம்

பழமையான கப்பல்


நார்வே நாட்டின் எடோயா தீவில் மண்ணுக்குள் ஆயிரம் ஆண்டு பழமையான 'வைகிங்' கப்பல் புதைந்திருப்பது ஜியோ ரேடார் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் நீளம் 56 அடி. தற்போது இதனை தோண்டும் திட்டம் ஏதுமில்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கப்பலின் காலம் குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது. 'வைகிங்' கப்பல் என்பது 8 - 11ம் நுாற்றாண்டில் கடல் கொள்ளையர்கள், வணிகர்கள் ஒரு நாட்டுக்கு செல்லும் போது, அங்கேயே அதனை விட்டுவிட்டு, மற்றொரு கப்பலில் அடுத்த நாட்டுக்கு சென்று விடும் வழக்கம் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X