எஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது

Updated : நவ 27, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (5)
Advertisement
எஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா , லோக்சபா நிறைவேறியது

புதுடில்லி: சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், நிறைவேறியது.பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள், அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு, 'இஸட் ஸ்பெஷல்' எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, மத்திய அரசு அளித்து வருகிறது.




சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு, 'வாபஸ்' பெறப்பட்டது.

இந்நிலையில், அவர்களுக்கு 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு தொடரும் என, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் மற்றும் அவருடன் வசிக்கும் நெருங்கிய உறவினர்கள், பதவி விலகி ஐந்தாண்டுகள் வரையிலான முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவருடன் வசிக்கும் உறவினர்களுக்கு மட்டும், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதற்கான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதற்கு, காங்., உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு, பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டபோது, ஒருவரும் கேள்வி கேட்கவில்லை.சோனியா குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட பின் தான், இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதாக, ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர்.

சோனியா குடும்பத்தினருக்கு, பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை. அது, இஸட் ஸ்பெஷலில் இருந்து, இஸட் பிளஸ் ஆக மாற்றப்பட்டு உள்ளது. சிறப்பு பாதுகாப்பு படை எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தையே, முந்தைய அரசுகள் நீர்த்துப்போக செய்துவிட்டன. அதை நிறைவேற்ற தான், இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
28-நவ-201907:44:17 IST Report Abuse
krish சபாஷ் நேரு வம்சாவளிகளுக்கு மட்டும், சட்ட திட்டங்கள் மீறி, ஏன் சிறப்பு SPG ? காங்கிரஸ் நண்பர்கள் யோசிக்கவேண்டும். உணர்ச்சி வசப்படல் ஆகாது.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
27-நவ-201921:03:27 IST Report Abuse
PANDA PANDI எல்லாம் சரிதான். எதற்கு இந்த Z ZPLUS எல்லாம். மக்களுக்கு பாதுகாப்பில்லை, பின் எதற்கு உங்களுக்கு எல்லாம்.
Rate this:
Share this comment
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
28-நவ-201902:20:00 IST Report Abuse
Swaroopa Methaகான் கிராஸ் டீம்காக்கெல்லாம் ஒட்டு போட்ட யாருக்கும் பாதுகாப்பு கெடைக்காது...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-நவ-201902:43:08 IST Report Abuse
தமிழ்வேல் மக்களின் பாதுகாப்பிற்கு மக்களைக் கூண்டிலா அடைக்க முடியும் ? புலி சிங்கத்தை பாதுகாப்பா அடைச்சிட்டு நாம உலாவலாம்....
Rate this:
Share this comment
krish - chennai,இந்தியா
28-நவ-201907:54:19 IST Report Abuse
krish@தமிவேல்: கருத்து நன்று புலி சிங்கங்களை, அதுகள் வாழும் காட்டில் விட்டால், மக்களுக்கு, பெருத்த நன்மைதானே. ஏன் கூட்டில் அடைத்து, மக்கள் வரியில், தீனி போட்டு வளர்க்கவேண்டும்? இவர்கள் ஒன்றும் Zoo இல் வைத்து பராமரிக்கப்படவேண்டியவர் அல்லர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X