காஷ்மீர் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

Added : நவ 27, 2019
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, ஆக., 5ல் நீக்கப்பட்டது.

அதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.இவற்றை, நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''தேசிய பாதுகாப்பு பிரச்னை இருப்பதை உணர்கிறோம். அதற்காக மாநிலத்தையே முடக்கலாமா?'' என, வாதிட்டார்.

இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து, 'காஷ்மீர் டைம்ஸ்' ஆங்கில நாளிதழின் ஆசிரியர் அனுராதா பாசின் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், ''கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடந்துள்ள அடக்குமுறை சட்டவிரோதமானது,'' என, வாதிட்டார்.ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் பாக்., ராணுவம் தவறாகப் பயன்படுத்தலாம் என்பதால் தான், இன்டர்நெட் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் வாதிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X