பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ139 கோடி வருவாய் : பியுஷ் கோயல்

Updated : நவ 29, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பிளாட்பாரம் டிக்கெட், பியுஷ் கோயல் ,  139 கோடி, கான்ஸ்டபிள்

புதுடில்லி: ரயில்வே, 'பிளாட்பாரம் டிக்கெட்' மூலம், 2018 - 19ம் நிதியாண்டில், 139 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

லோக்சபாவில், கேள்வி நேரத்தின் போது, நேற்று பதில் அளித்த, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில் பயணியருக்கும், அவர்களது உடைமைகளுக்கும், ஆர்.பி.எப்., எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம், பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பெண் போலீசார்இதில், பெண் பயணியருக்கு பாதுகாப்பு வழங்க, அதிக அளவிலான பெண் போலீசாரை நியமிக்கும் பணி நடக்கிறது.ஏற்கனவே, 4,078 பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் 298 எஸ்.ஐ.,க்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2,300 பெண் போலீசார், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் வருகை, புறப்பாடு, தற்போது சென்று கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை உடனுக்குடன் அறியும் கருவியை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து, ரயில்வே தகவல் மையம் தயாரித்துள்ளது. இந்தக் கருவியை, பயணியர் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட, 6,000 ரயில்களில் பொருத்த, மத்திய அரசு, கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளது. விளம்பரங்கள்ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்கவும், விளம்பரங்கள் செய்யவும், 2018 - 19ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், 230 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தற்போதைய நிதியாண்டில், செப்டம்பர் வரை, 128 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 2018 - 19ல், பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை மூலம், 139 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இதில், கடந்த செப்டம்பர் வரை, 78.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


பிராந்திய மொழிகளில் தேர்வுஎழுதுவோர் எண்ணிக்கை உயர்வு



லோக்சபாவின் கேள்வி நேரத்தின் போது, ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கூறிய தாவது:ரயில்வே பணிக்கான நேரடி தேர்வுகள், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வை, 2018ல், 46.62 லட்சம் பேர் எழுதினர். இதில், 876 பேர், பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதினர். 2019ல், 47.18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், 55 ஆயிரம் பேர், பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-நவ-201913:45:38 IST Report Abuse
J.Isaac இதற்காகத்தான் ரயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு கொடுக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
28-நவ-201911:47:39 IST Report Abuse
பஞ்ச்மணி அப்பாலே இங்க நாங்க டுமீலன்ஸ் ஒரு பொருளாதார வல்லுநர் கூட்டம் சும்மா குந்திக்குனு இருக்கோம் முதல்லே எத செஞ்சாலும் எங்க கிட்டே கேட்டு செய்யுங்க சும்மாக்காட்டியும் எங்களை கேட்கமா சொல்லக்கூடாது தெர்தா
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-நவ-201904:47:38 IST Report Abuse
Mani . V இவ்வளவு வசூலாகியும் இந்திய பொருளாதாரம் ஏன் பாதாளத்தில் இருக்கிறது? ஒண்ணுமே புரியல போங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X