எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

'இ - சிகரெட்' அவசர சட்டத்தின் மர்மம் என்ன?: லோக்சபாவில் தி.மு.க., சரமாரி கேள்விகள்

Updated : நவ 28, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
'பொதுமக்களின் உடல்நலம் குறித்த அக்கறை, மத்திய அரசுக்கு உண்மையிலேயே இருக்குமேயானால், 'இ - -சிகரெட்'டை மட்டுமல்லாமல், புகையிலை சம்பந்தப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும், தடை விதிக்க முன் வருமா?' என, பார்லிமென்டில், தி.மு.க., கேள்வி எழுப்பிஉள்ளது.இ-- - சிகரெட்டுக்கு தடை விதிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் கோரும் தீர்மானத்தின் மீது, லோக்சபாவில், தி.மு.க.,
 'இ - சிகரெட்', அவசர சட்டத்தின்,மர்மம் என்ன?:,லோக்சபாவில் தி.மு.க.,சரமாரி ,கேள்விகள்

'பொதுமக்களின் உடல்நலம் குறித்த அக்கறை, மத்திய அரசுக்கு உண்மையிலேயே இருக்குமேயானால், 'இ - -சிகரெட்'டை மட்டுமல்லாமல், புகையிலை சம்பந்தப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும், தடை விதிக்க முன் வருமா?' என, பார்லிமென்டில், தி.மு.க., கேள்வி எழுப்பிஉள்ளது.

இ-- - சிகரெட்டுக்கு தடை விதிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் கோரும் தீர்மானத்தின் மீது, லோக்சபாவில், தி.மு.க., சார்பில், தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் பேசியதாவது:

மிக நெருக்கடியான, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் தான், அவசர சட்டம் கொண்டு வரப்படும். ஆனால், இ - -சிகரெட் தடைக்கான அவசர சட்டத்தை, மத்திய அரசு, செப்டம்பரிலேயே கொண்டு வந்துவிட்டது.இத்தனைக்கும், நவம்பரில் குளிர்கால கூட்ட தொடர் நடக்கும் என்பதும், அதில், மசோதா கொண்டு வந்து நிறைவேற்றலாம் என்பது தெரிந்தும், இப்பிரச்னையை, அவசர சட்டம் வாயிலாக அணுகுவதன் மர்மம் தான் புரியவில்லை.


சந்தேகம்வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக நீதி என, நிறைய பிரச்னைகள் இருக்கும்போது, மொத்த பயன்பாட்டில், 0.02 சதவீதம் மட்டுமே உள்ள இ -- சிகரெட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? இதன் பின்னணியில், 'சிகரெட் லாபி' உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இ -- சிகரெட்டுகள்தான், புகையிலை சிகரெட்டுகளை புழக்கத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என, முக்கிய மருத்துவ ஆய்வு இதழ்கள் கூறுகின்றன.இ--சிகரெட்டுகளுக்கு, தடை விதித்த பல நாடுகள், பிறகு நீக்கி விட்டன. புகையிலை சிகரெட்டை விட, இது பல மடங்கு ஆபத்து இல்லை என்பது தான் இதற்கு காரணம்.


தைரியம் உண்டா?டாக்டரான மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கே இது தெரியும். புகையிலை சிகரெட், இ-- சிகரெட் இரண்டுமே உடல்நலத்திற்கு கேடானதுதான். ஆனால், இதில் ஒன்றை மட்டும் குறிவைப்பது ஏன் என்பதுதான் தெரியவில்லை.'இ - சிகரெட் வேண்டாம்' என, சர்வதேச நுரையீரல் புற்றுநோய் ஆய்வு மையம் கூறுவதாக தெரிவிக்கும் மத்திய அரசு, அதே ஆய்வு மையம், 'புகையிலை சிகரெட் நல்லது' என, பரிந்துரை செய்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

உண்மையிலேயே, பொதுமக்களின் உடல்நலத்தில் அக்கறை இருக்குமேயானால், நாடு முழுவதும், புகையிலை பொருட்கள் அனைத்தையுமே தடை விதிக்க, மத்திய அரசுக்கு தைரியம் உண்டா?இவ்வாறு, செந்தில்குமார் பேசினார்.விவாதத்திற்குப் பின், மசோதா நிறைவேறியது.


'‛தி.மு.க.,வுக்கு இரட்டை முகம்''தன் உரையின்போது, குட்கா விவகாரம் குறித்தும் பேசிய செந்தில் குமார், தமிழகத்தில் நடந்த குட்கா ஊழல் குறித்தும், தமிழக அமைச்சரின் பெயரையும் கூறினார். இதற்கு பதிலடி தந்து, தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார் பேசியதாவது:தமிழக அமைச்சரின் பெயரை குறிப்பிடுவது, சபை விதிகளுக்கு முரணானது; அதை நீக்க வேண்டும்.

புகையிலை பொருட்களை தடை செய்யும்படி சபைக்குள் கோரும் தி.மு.க., வெளியில் சென்றால், புகையிலை தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும். நேரத்துக்கு தகுந்தாற்போல ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் அக்கட்சிக்கு, எப்போதுமே இரட்டை முகம் தான்.இவ்வாறு அவர் பேசினார்.


'புகையிலை லாபியில் அரசு சிக்கியுள்ளது'ஆரணி எம்.பி., விஷ்ணுபிரசாத் பேசியதாவது:'டிஜிட்டல் இந்தியா' என கூறி, பா.ஜ., ஆட்சியைப் பிடித்துவிட்டு, இப்போது இ - -சிகரெட்டுக்கு தடை விதிப்பது ஆச்சரியம். இ- - சிகரெட்டுகளின் விலை மிகவும் அதிகம். இந்த சிகரெட்டுகளை பிடிப்பவர்கள் வசதியானவர்கள். எனவே,
அவர்களைப் பற்றி தான் மத்திய அரசு கவலைப்படுகிறதோ? சாதாரண சிகரெட்டுகளை பிடிக்கும் ஏழைகளை அரசு காப்பாற்ற வேண்டாமா? புகையிலை லாபியின் நெருக்கடியில் அரசு சிக்கி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.


சுப்ரீம் கோர்ட்டின் கிளை சென்னையில் தேவைராஜ்யசபாவில் பேசிய, ம.தி.மு.க., - எம்.பி., வைகோ, ''மொழி வேறுபாடு, நெடுந்தொலைவு பயணம், டில்லியில் தங்குமிட செலவு, வழக்கறிஞர்கள் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், உச்ச நீதிமன்றத்தை எளிதில் அணுக முடியவில்லை. ''இதனால், ஏழை எளிய மக்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதி பெற முடியாத நிலை உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்,'' என்றார்.


‛நன்றி தெரிவிக்கவே வந்தேன்'குட்கா ஊழல் குறித்து, மத்திய அமலாக்கத்துறை தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லி வந்திருந்தார். பார்லி.,யில், சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபேயை சந்தித்த அவர்,"தமிழகத்திற்கு, ஏற்கனவே ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்த நிலையில், மேலும் மூன்று கல்லூரிகளுக்கு அனுமதி தந்த, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்,'' என்றார்.


- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-201917:28:28 IST Report Abuse
Lion Drsekar மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது அதை தடை செய்வதற்கு எவ்வளவு கேள்வி ?? இதுதான் ஜனநாயகம். இன்னமும் மது ஆலைகளை இழுத்து மோதினால் அவ்வளவுதான் , நாட்டில் மக்கள் வேலை இழந்து விட்டார்கள், ஜனநாயகப் படுகொலை, ( அனைத்தும் இவர்கள் வசம்) வந்தே மாதரம்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
28-நவ-201914:59:40 IST Report Abuse
siriyaar சிகரெட் கேடானது இப்படிக்கு டாஸ்மாக் சப்ளையர் - திமுக குடும்பம்
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
28-நவ-201914:51:35 IST Report Abuse
M S RAGHUNATHAN Let Stalin ask Vaiko to surrer his son's business links with ITC. Vaiko will retort that it his son's business. Similarly will Stalin direct his daughter in law to stop teaching Hindi and convert the medium of instruction in her school, he will say it her business. The so called opposition to Hindi or tobacco products or IMFL business is just eyewash.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X