ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் 'வாபஸ்'

Added : நவ 27, 2019
Advertisement
 ஜம்மு-காஷ்மீர்  இட ஒதுக்கீடு மசோதா:  லோக்சபாவில்  'வாபஸ்'

புதுடில்லி: அரசுப் பணிகளில், குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகைகள் வழங்கும், ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் நேற்று, 'வாபஸ்' பெறப்பட்டது.

ஜம்மு - காஷ்மீரில், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கு, மாநில அரசு பணிகள் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்கவும், ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில், ஜுன் மாதம் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ஆகஸ்ட், 5ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இதனால், மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், இட ஒதுக்கீடுகள், ஜம்மு - காஷ்மீருக்கும் பொருந்தும் என்ற நிலை உருவானது.இதன்படி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும் என்பதால், அங்கு நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டு மசோதாவை, மத்திய அரசு, நேற்று வாபஸ் பெற்றது.இணைய சேவைகள், எப்போதும் செயல்படும் என்ற கேள்விக்கு, அமைச்சர் தரப்பில், தெளிவான பதில் அளிக்கப்படவில்லை.இந்நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, லோக்சபாவில் பேசும்போது, ''ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5,161 பேர் கைது செய்யப்பட்டனர்.

''இதில், 609 பேர் மட்டுமே, தற்போது காவலில் உள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்,'' என்றார்.லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ''ஜம்மு - காஷ்மீரில், 30 - 35 ஆண்டுகளாக, பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. நம் படைகளின் நடவடிக்கையால், ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத சம்பவங்கள், குறைந்துவிட்டன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X