இலங்கை அமைச்சரவை விஸ்தரிப்பு: தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை

Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கொழும்பு, :இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபயா ராஜபக்சே, தமது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார். அதில் தமிழர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார்.

தற்போதுள்ள பார்லி., யின் ஆயுட்காலம், அடுத்த ஆண்டு வரை உள்ளது. அதுவரை இடைக்கால அமைச்சரவையே செயல்படும். ஏற்கனவே, 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபயா அறிவித்திருந்தார்.இந்த நிலையில், தமது அமைச்சரவையை அவர் நேற்று விரிவுபடுத்தினார். அவருடைய அமைச்சரவையில், 35 பேர் அமைச்சர்களாகவும், மூன்று பேர் துணை அமைச்சர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, கோத்தபயாவின் சகோதரர், சமல் ராஜபக்சே, ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன், நமல் ராஜபக்சேவுக்கு பதவி அளிக்கப்படவில்லை.கடந்த அமைச்சரவையில், இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு பெண் இடம் பெற்றிருந்தனர். கவர்னராகிறார் முரளிதரன்பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், 47, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தின் கவர்னராக நியமிக்கப்படுகிறார்.'கவர்னர் பதவியை ஏற்கும்படி, முரளிதரனுக்கு, அதிபர் கோத்தபயா அழைப்பு விடுத்துள்ளார்' என, பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட்டில், 800 விக்கெட்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய சாதனை புரிந்துள்ள முத்தையா முரளிதரன், சென்னையைச் சேர்ந்த மதுமலரை, 2005ல் திருமணம் செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அவர் கருதப்படுகிறார். கடந்த, 2010ல், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
28-நவ-201915:40:49 IST Report Abuse
aryajaffna 2 தமிழ் அமைச்சர்கள் நியமிக்க பட்டு உள்ளனர், முஸ்லிம்களுக்கு தான் அமைச்சக்கரவையில் இடம் அளிக்கப்படவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X