மும்பை தாக்குதலில் நீதி இல்லை

Added : நவ 27, 2019
Advertisement

வாஷிங்டன், : 'மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 2008ல் நடந்த கொடூர தாக்குதலின் முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது, அதில் உயிரிழந்தோருக்கு செய்யப்பட்ட அவமானம்' என, அமெரிக்கா கூறியுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 2008, நவ., 26ல், பாக்.,கைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
வழக்கு

இந்த தாக்குதலுக்கு மூளையாகக் கருதப்படும், பாக்.,கைச் சேர்ந்த ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஹபீஸ் சயீது உள்ளிட்டோர் மீது, இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், சயீது உள்ளிட்டோரை ஒப்படைக்க, பாக்., மறுத்து வருகிறது. சயீதை சர்வதேச பயங்கரவாதியாக, ஐ.நா., மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன.மும்பை தாக்குதலின், 11வது ஆண்டையொட்டி, அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது:மும்பை தாக்குதலில் உயிரிழந்த, ஆறு அமெரிக்கர் உட்பட, 166 பேருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம். இந்த தாக்குதல் நடந்து, 11 ஆண்டுகளாகியும், முக்கிய குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இது தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரை அவமதிப்பதாகும். தாக்குதலில் தொடர்புடையோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆர்ப்பாட்டம்அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி செயலர் ஆலிஸ் வெல்சும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் பாக்.,கைச் சேர்ந்த சிறுபான்மையினர் ஆகியோர், பாக்., துாதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய வம்சாவளி மரணம்தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் அமைப்பின் சார்பில், அமெரிக்காவில் வசித்து வந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அனில் ராஜ் பணியாற்றி வந்தார். காபூலில், யு.என்.டி.பி., வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அனில் ராஜ் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X