பொது செய்தி

தமிழ்நாடு

'இ - சேவை' மையங்களில் கேமரா நேரடி: கண்காணிப்பில் ஊழியர்கள்

Added : நவ 27, 2019
Share
Advertisement
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, 'இ - சேவை' மையங்கள், 'சிசிடிவி கேமரா' வாயிலாக, தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வாயிலாக, அரசு இ - சேவை மையங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழகத்தில் மொத்தம், 600க்கும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, 'இ - சேவை' மையங்கள், 'சிசிடிவி கேமரா' வாயிலாக, தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வாயிலாக, அரசு இ - சேவை மையங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மொத்தம், 600க்கும் அதிகமான, அரசு இ - சேவை மையங்கள் செயல்படுகின்றன; இவற்றில், 650 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், 'ஆதார்' பதிவு செய்தல் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்த சேவை மையங்கள், சரியான நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை; முறையான சேவைகள் வழங்குவதில்லை என, பொது மக்களிடம் புகார் எழுந்தது. இதையடுத்து, சேவைகளை மேம்படுத்தும் வகையில், அனைத்து சேவை மையங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:அரசு இ - சேவை மைய ஊழியர்கள், சரியான நேரத்திற்கு வருகின்றனரா;
எப்போது மையத்தை திறக்கின்றனர் என்பதை, அலுவலகத்தில் இருந்து ஆய்வு செய்ய, 'சிசிடிவி' கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 850க்கும் அதிகமான கேமராக்கள், 650 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 250க்கும் மேற்பட்ட கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இதர கேமராக்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், அவற்றுக்கு இணைப்புகள் கொடுக்கப்படும். எனவே, ஊழியர்கள் என்ன செய்கின்றனர் என்பதை, இங்கிருந்து கண்காணிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X