பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக, 1,750 பஸ்கள் தயாரிக்க அரசு, 'ஆர்டர்'

Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 1,750 பஸ்கள் தயாரித்து வழங்குவதற்கான ஆணையை, 'அசோக் லேலண்டு' நிறுவனம் பெற்றுள்ளது.இது குறித்து, சென்னை, அசோக் லேலண்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அசோக் லேலண்டு நிறுவனம், அதிகமான பஸ்களை தயாரிக்கும் மிகப் பெரிய உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு, தமிழக அரசிடமிருந்து, பஸ்கள் தயாரித்து வழங்குவதற்கான, மிகப் பெரிய ஒப்பந்த ஆணை கிடைத்துள்ளது.

அதன்படி, தமிழக அரசு போக்குவரத்திற்கு கழகத்திற்காக, 1,750 பஸ்கள் தயாரித்து வழங்க உள்ளோம். இதற்கான ஆணை, நேற்று முறைப்படி வழங்கப்பட்டுள்ளது. இதே போல, பல்வேறு மாநில போக்குவரத்து கழகங்களில் இருந்தும், பஸ் தயாரிப்பு ஆணை கிடைத்துள்ளது. இது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அசோக் லேலண்டு நிறுவனத்தின் திறமைக்கு கிடைத்த மதிப்பாக, இதைக் கருதுகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
28-நவ-201906:58:45 IST Report Abuse
natarajan s அரசுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கண்டிக்கிறோம், ஆனால் தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக்கு கழகங்களுக்கு பாடி கட்ட சென்னை குரோம்பேட்டையில் மிக பெரிய பணிமனை உள்ளது . அது தற்போது போலீசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் கோடௌனாக உள்ளது , இதெல்லாம் இந்த தொழில் சங்கங்களின் கண்ணில் படுவதேயில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X