அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உணவு பொருட்களின் தரத்துக்கு முன்னுரிமை: தினகரன்

Added : நவ 27, 2019
Advertisement

சென்னை,: 'பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு, அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு அதிகமிருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம், சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது.நேரடியாக மக்களை பாதிக்கும் இந்த பிரச்னையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இ.பி.எஸ்., அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், உணவு கலப்படத்தில் நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, வெளியான செய்தி, பெரும் அதிர்ச்சி தருகிறது.

உணவுப் பொருட்களை ஆய்வு செய்து மதிப்பிடும், பரிசோதனைக் கூடங்கள் முறையாக இயங்காததும், முழு நேரப் பணியாக, இதை கவனிக்கும் அதிகாரிகள் இல்லாததும், இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.மக்கள் உயிரோடு விளையாடும், இந்த அலட்சியமான செயல்பாடுகளை, அரசு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை, உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, முன்னுரிமை கொடுத்து, மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X