அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமரிடம் தமிழக அரசு கறாராக நடக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: ''மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில், பிரதமரிடம், தமிழக அரசு கறாராக நடந்து கொள்ள வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:மஹாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயக படுகொலை. கவர்னர் தனக்கு வழங்கப்பட்டுள்ள புனித மான அதிகாரங்களை மீறியுள்ளார். பா.ஜ.,வை அங்கு ஆட்சி அமைக்க வைத்தது, தவறான செயல்பாடு. உச்ச நீதிமன்றத்தால், இந்திய இறையாண்மை காப்பாற்றப் பட்டுள்ளது.

முந்தைய மத்திய ஆட்சியில், அ.தி.மு.க.,விடம், 50 எம்.பி.,க்கள் இருந்தும், தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை, மத்திய அரசிடம் இருந்து முறையாக வாங்கவில்லை; அப்புறம் எங்கிருந்து சிறப்பு நிதியை வாங்க முடியும். தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை பெற, வாய் வேண்டும்; செல்வாக்கு மற்றும் தைரியம் வேண்டும். மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்திற்கான நிதியை பெறுவதில், பிரதமரிடம், தமிழக அரசு கறாராக நடந்து கொள்ள வேண்டும். முதல்வரும், நிதியமைச்சரும் டில்லி செல்லும்போது, தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி குறித்து பேச வேண்டும்.

ஆனால், அவர்கள் தங்கள் நலனை பார்த்து விட்டு, மாநில நலனை புறக்கணிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, அவற்றை ஒழுங்காக நடைமுறைப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அழகிரிகூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naam Hindu - Madurai,இந்தியா
28-நவ-201911:37:13 IST Report Abuse
Naam Hindu இவர் ஒரு காமெடி . மதுரை அழகிரி என்று ஏமாந்து இந்த நியூஸ் படிக்கவந்தேன் அப்புறம் தான் தெரிந்தது இது வெட்டி_கான் தலைவியின் அடிமை என்று .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X