அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி பிறந்த நாள்: 'செல்பி' எடுக்க தடை

Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதய நிதி, தன், 42வது பிறந்த நாளை, நேற்று சென்னையில், கொண்டாடினார். அவருடன், 'செல்பி' எடுக்க தடை விதிக்கப்பட்டது.பிறந்த நாளை ஒட்டி, சென்னை, மெரினாவில் உள்ள அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, உதயநிதி மரியாதை செலுத்தினார்.

பின், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனை சந்தித்து, ஆசி பெற்றார். தேனாம்பேட்டை அன்பகத்தில், தி.மு.க.,வினரிடம், உதயநிதி வாழத்து பெற்றார். அப்போது, வாழ்த்து தெரிவிக்க வந்த இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள், உதயநிதியுடன், 'செல்பி' புகைப்படம் எடுக்க விரும்பினர்; ஆனால், தடை விதிக்கப்பட்டது.

இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உதயநிதி பிறந்த நாளை ஒட்டி, சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில், 'ஹேஷ்டேக்' உருவாக்கப்பட்டு, 'டிரண்ட்' செய்யும்படி, தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது; ஆனாலும், முதலிடம் பிடிக்கவில்லை. இதனால், கட்சியின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது, இளைஞர் அணியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-201907:58:36 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து பிற்காலத்தில் உதய் அண்னா அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புஏற்கும்போது இந்த செபிக்களால் பிரச்னை வரலாம் ...மேலும் செல்பி சமூகநீதிக்கு எதிரானது ...இடஒதுக்கீட்டுக்கு எதிரானது ...செல்பி எடுப்பதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் இந்தி நுழைய வாய்ப்பு இருக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X