பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, போலி விதைகள், செடிகள் விற்பனை

Added : நவ 27, 2019
Advertisement
 தமிழகத்தில், 'ஆன்லைன்' வாயிலாக,  போலி விதைகள், செடிகள் விற்பனை

சென்னை : தமிழகத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, போலி விதைகள் மற்றும் செடிகள் விற்பனை களைகட்டுகிறது.

தமிழக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையால், தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டும், கொள்முதல் செய்யப்பட்டும், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. அரசு அனுமதி பெற்ற தனியார் கடைகளிலும், விதை விற்பனை நடந்து வருகிறது. தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக காய்கறிகள், மூலிகை செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுமட்டுமின்றி, வாழை, சாத்துக்குடி, ஆப்பிள், கொய்யா, மா உள்ளிட்ட பழவகை கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக, செடிகளில் காய்கறிகளும், மரங்களில் பழங்களும் காய்த்து தொங்குவது போன்று, விளம்பரம் செய்யப்படுகிறது. நுகர்வோர்களை கவரும் வகையில், காய்கறிகளின் வண்ணங்கள் மாற்றப்பட்ட படங்கள் வெளியிடப்படுகின்றன.சமூக வலைதளங்களிலும், இதுபோன்ற விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை முன்பதிவு செய்தால், 10 நாட்களில் வீடு வந்து சேரும் என, வாக்குறுதி தரப்படுகிறது. நேரடியாக பணம் கொடுத்தால் போதுமானது என்ற, சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற செடிகள் மற்றும் பழ மரக்கன்றுகள், விதைகள் போலியானவை என, தெரிய வந்துள்ளது. இது தெரியாமல் பலரும், 100 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை கொடுத்து, வாங்கி ஏமாறுகின்றனர். நுகர்வோரை ஏமாற்றுவதற்காக, இதுபோன்ற செயல்களில் சிலர் இறங்கியுள்ளனர். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X